Published : 22 Nov 2015 11:08 AM
Last Updated : 22 Nov 2015 11:08 AM

தீவிரவாதத்தை ஒடுக்க ‘ஆசியான்’ ஒத்துழைப்பு அவசியம்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

உலகத்துக்கு பெரும் ஆபத்தாகவும் அச்சுறுத்தலாகவும் உருவெடுத் துள்ள தீவிரவாதத்தை ஒடுக்கிட தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பு (ஆசியான்) ஒத்துழைப்பை நல்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

ஆசியான்-இந்தியா உச்சி மாநாடு மலேசியாவின் கோலாலம் பூர் நகரில் நேற்று தொடங்கியது. அதில் மோடி பேசியதாவது:.

தீவிரவாதம் உலகுக்கு அச் சுறுத்தல் தருவதாக வளர்ந்து மிகப்பெரிய சவாலாக உரு வெடுத்துள்ளது. இதை ஒடுக்கிட பிராந்திய, சர்வதேச நிலையில் ஒத்துழைப்பை எப்படி அதிகரிக்கமுடியும் என்பது பற்றி யோசிக்கவேண்டும்.

சர்வதேச தீவிரவாதம் தொடர்பாக விரிவான ஒப்பந்தம் நிறைவேற்றுவதற்கு ஆதரவு தருவது பற்றியும் பரிசீலிக்கலாம்.

நிச்சயமற்ற காலகட்டத்தி லிருந்து நமது பிராந்தியம் அமைதி யான வளம் கொழிக்கக்கூடிய எதிர்காலத்தை நோக்கிச் செல்கி றது. நமது பிராந்திய கட்டமைப்பை வரையறுப்பதில் ஆசியான் அமைப்பு தலைமையேற்று முக்கியப் பங்காற்றிட வேண்டும்.

கடல் போக்குவரத்தில் முழு சுதந்திரம் இருக்க வேண்டும் என்ற ஆசியான் அமைப்பின் உறுதியான நிலைப்பாட்டில் இந்தியாவுக்கும் உடன்பாடுதான். விமானப் போக்கு வரத்து, தடையில்லா வர்த்தகம் போன்றவையும் சர்வதேச சட்டத் துக்குட்பட்டதாக இருக்கவேண்டும் என்ற ஆசியான் நிலைப்பாடும் ஏற்கத்தக்கது ஆகும்.

எல்லை தொடர்பான தகராறுகளுக்கு அமைதியான வழிகள் மூலம் தீர்வு காண்பது நல்லது. சாலை இணைப்பு வசதி, நாடுகள் வளம் அடைவதற்கான வழியாகும். இந்தியா-மியான்மர், தாய்லாந்து நெடுஞ்சாலை திட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதை 2018-க்குள் முடித்துவிட வேண்டும். ஆசியான் நாடுகள் அனைத்துக்கும் விரைவில் மின்னணு விசா வசதி வழங்கிட இந்தியா முடிவு செய்துள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவை இந்தியா-ஆசியான் பொருளாதார வளர்ச்சிக்கு தூண்களாக விளங்குகின்றன.

மலிவு விலை தொழில்நுட் பங்களை சந்தைப்படுத்திட, தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்ள ஆசியான்-இந்தியா தொழில்நுட்ப மையத்தை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x