Last Updated : 04 Nov, 2015 07:19 AM

 

Published : 04 Nov 2015 07:19 AM
Last Updated : 04 Nov 2015 07:19 AM

மாட்டிறைச்சி சாப்பிட்டால் சித்தராமையா தலையை வெட்டுவேன்: பகிரங்க மிரட்டல் விடுத்த கர்நாடக பாஜக மூத்த தலைவர் கைது

இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டின் இறைச் சியை சாப்பிட்டால், கர்நாட‌க முதல்வர் சித்தராமையாவின் தலையை வெட்டுவேன் என்று பாஜக மூத்த தலைவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள் ளார். போலீஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

கர்நாடக முதல்வர் சித்தராமையா மாட்டிறைச்சி விவகாரம் தொடர்பாக கடந்த வாரம் கூறும்போது, “எனக்கு மாட்டிறைச்சி பிடித்தால் சாப்பிடுவேன். அதை யாரும் தடுக்க முடியாது. ஒருவரின் உணவு உரிமை குறித்து கேள்வி கேட்க யாருக்கும் உரிமை இல்லை” என்றார்.

இதையடுத்து, விஸ்வ ஹிந்து பரிஷத், ஸ்ரீராம் சேனா, சிவசேனா, பஜ்ரங் தளம் உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகளின் கர்நாடக பிரிவினர் சித்தராமையாவை கண்டித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் பெங்களூரு, மைசூரு, மங்களூரு, ஷிமோகா, ஹாசன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மூத்த தலை வர்களின் முன்னிலையில் போராட்டம் நடைபெற்றது.

பெங்களூரு டவுன் ஹால் எதிரே நடந்த போராட்டத்துக்கு பாஜக முன்னாள் துணை முதல்வர் அசோக் தலைமை வகித்தார். அப்போது அசோக் பேசும்போது, “மாட்டிறைச்சி சாப்பிடப் போவதாக சித்தராமையா கூறியிருப்பதன் மூலம் பெரும்பான்மை இந்துக்களின் மனதைப் புண்படுத்தியுள்ளார். ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திப்படுத்துவதற்காகவே அவர் இவ்வாறு கூறியுள்ளார். முதல்வரே இவ்வாறு பேசுவது சரிய‌ல்ல. எனவே, அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றார்.

இதேபோல ஷிமோகா மாவட்ட பாஜக சார்பில் கோபி சர்க்கிள் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பாஜக செயலாளரும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் நெருங்கிய ஆதரவாளருமான சென்னபசப்பா தலைமை வகித்தார். அப்போது அவர் பேசும்போது, “இந்துக்கள் தெய்வமாக வணங்கும் மாட்டின் இறைச்சியை சாப்பிடு வேன் என சித்தராமையா பேசியதை வன்மையாக கண்டிக்கிறேன்.

நான் மாட்டிறைச்சி சாப்பிடு வதை யாராலும் தடுக்க முடியாது என்று பேசியுள் ளார். முடிந்தால் அவர் ஷிமோ காவுக்கு வந்து மாட்டிறைச்சி சாப்பிடட்டும். அவ்வாறு சாப்பிட்டால் சித்தராமையா வின் தலையை வெட்டுவேன்” என ஆவேசமாக பேசினார்.

அவரது இந்தப் பேச் சுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சித்தரா மையா, “சென்னபசப்பா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் படும். இது பாஜகவின் சகிப் புத்தன்மையற்ற நிலைக்கு மிகச் சிறந்த சான்றாகும். ஒருவரது உணவு விருப்பத்தில் தலையிடுவது மனிதத் தன்மையற்ற செயல்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சித்தரா மையாவுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்ன பசப்பா மீது ஷிமோகா மாவட்ட காங்கிரஸ் செயலாளர் பிரசன்ன குமார் போலீஸில் புகார் செய்தார். சென்னபசப்பா மீது 3 பிரிவுகளில் போலீ ஸார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x