Published : 25 Mar 2021 03:14 AM
Last Updated : 25 Mar 2021 03:14 AM

கேரள சட்டப்பேரவை தேர்தல்- தங்கக் கடத்தல் வழக்கை எழுப்பி இடதுசாரி அரசை விமர்சித்த அமித்ஷா

கேரளத்தை உலுக்கிய தங்கக் கடத்தல் வழக்கை எழுப்பி, பினராயி விஜயன் தலைமையிலான இடதுசாரி அரசை மத்திய அமைச்சர் அமித்ஷா விமர்சித்தார்.

திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரக துணைத் தூதரகத்தின் முகவரிக்கு வந்த ஒரு பார்சலில் 30 கிலோ தங்கம் இருந்தது கடந்த ஆண்டு கண்டு பிடிக்கப்பட்டது. வெளிநாட்டு தூதரகங்களுக்கு வழங்கப்படும் சலுகையை முறைகேடாக பயன் படுத்தி, இந்த தங்கம் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதில் முக்கிய குற்றவாளியாக கேரள அரசில் பணியாற்றி வந்த ஸ்வப்னா சுரேஷ் கைது செய்யப்பட்டார். முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தில் பணியாற்றிய ஐஏஎஸ் அதிகாரியுடன் ஸ்வப்னா வுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.

இந்நிலையில் கேரளத்தின் கோட்டயம் மாவட்டம், கஞ்சிரப் பள்ளியில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் அமித்ஷா நேற்று பிரச்சாரம் செய்தார். அப்போது தங்கக் கடத்தல் வழக்கு விவகாரத்தை எழுப்பிய அமித்ஷா, “தங்கக் கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளி உங்கள் அலுவலகத் தில் பணியாற்றினாரா, இல்லையா? அவருக்கு உங்கள் அரசு மாதந் தோறும் ரூ.3 லட்சம் வழங்கியது உண்மையா, இல்லையா? குற்றவாளிகளுக்கு உதவிட உங் களின் முதன்மை் செயலாளர் தொலைபேசி அழைப்புகள் செய் தது உண்மையா, இல்லையா?” என கேள்வி எழுப்பினார்.

அமித்ஷா மேலும் பேசும்போது, “கேரளத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால் இங்குள்ள இடதுசாரி அரசோ, அரசியல் ஆதாயம் கருதி மிகவும் தாமதமாகவே ராணுவத்தை அழைத்தது. கேரள மக்களின் உயிரைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. கேரளத்தை இடதுசாரி மற்றும் காங்கிரஸ் அரசுகள் ஊழலின் மையமாக மாற்றியுள்ளன. காங்கிரஸ் ஆட்சியில் சோலார் பேனல் ஊழல் வெளிச்சத்துக்கு வந்தது. இடதுசாரிகள் ஆட்சியில் தங்கக் கடத்தில் விவகாரம் வெளிப்பட்டுள்ளது” என்றார்.

140 உறுப்பினர்களைக் கொண்ட கேரள சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x