Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM

மேற்கு வங்கத்தில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி

பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு நேற்று அமைச்சர் அமித் ஷா அளித்த பேட்டியில் கூறியிருப்ப தாவது:

மேற்கு வங்க தேர்தல் களம் பாஜகவுக்கு மிகவும் சாதகமாக உள்ளது. திரிணமூல் காங்கிரஸின் அராஜக மற்றும் அடக்குமுறையை கண்டு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். திரிணமூலுக்கு மாற்றாக நல்லாட்சி மலராதா என அவர்கள் ஏக்கத்தில் உள்ளனர். அதே சமயத்தில், பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்துள்ள நலத்திட்டங்களும், மேற்கு வங்கத்தின் வளர்ச்சிக்காக அவர் கொண்டிருக்கும் தொலைநோக்கு பார்வையும் அம்மாநில மக்களை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்த முறை அங்குள்ள 294 தொகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடிக் கும். இவ்வாறு அமித் ஷா கூறினார்.

முன்னதாக, அசாம் தேர்தல் குறித்து கூறுகையில், “அசாமில் பாஜக அரசு செய்திருக்கும் மக்கள் நலத்திட்டங்களே வெற்றிக்கு போதும். மேலும் அங்கு காங்கிரஸ் ஏஐடியுஎப் என்ற முஸ்லிம் அடிப்படைவாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளது. இதை காங்கிரஸாரும், அக்கட்சிக்கு ஆதரவான வாக்காளர்களுமே விரும்பவில்லை. இதுவே பாஜக அங்கு ஆட்சியமைப்பதற்கு வழிகோலும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x