Published : 22 Mar 2021 10:49 AM
Last Updated : 22 Mar 2021 10:49 AM

பாஜக ஆதரவுடன் வெற்றிபெற முயலும் காங்கிரஸ் தலைவர்கள்: பினராயி விஜயன் குற்றச்சாட்டு

திருவனநதபுரம்

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆதரவுடன் சில காங்கிரஸ் தலைவர்கள் வெற்றி பெற திட்டமிட்டு வருவதாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.

கேரளாவில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் பாஜக மூத்த தலைவரும், எம்எல்ஏவுமான ஓ.ராஜகோபால் தொலைக்காட்சி ஒன்று அளித்துள்ள பேட்டியில் இதற்கு முன்பு காங்கிரஸுடன் இணைந்து இடதுசாரி கூட்டணியை தோற்கடிக்க தேர்தல் வியூகம் வகுத்தாக கூறினார்.

இதனை கேரள முதல்வர் பினராயி விஜயன் காட்டமாக விமர்சித்தார். கேரளாவின் மூத்த பாஜக தலைவரும் அக்கட்சியின் ஒரே ஒரு எம்எல்ஏவும் கேரள தேர்தலில் காங்கிரஸ்- முஸ்லிம் லீக்- பாஜக புனிதமற்ற கூட்டணியை வெளிப்படுத்தியுள்ளார் என விமர்சித்து இருந்தார்.

முதல்வர் பினராயி விஜயன் இன்று மீண்டும் குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது:

கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் இடதுசாரி கூட்டணி மீண்டும் வெற்றி பெறும் கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. இது ஒரு அறிகுறி மட்டுமே. இதற்காக இடதுசாரி அணி தொண்டர்கள் மகிழ்ச்சி அடையலாம். ஆனால் முழுமையாக பணியற்றினால் மட்டுமே முழுமையான வெற்றி கிடைக்கும். எனவே தேர்தல் பணியில் அவர்கள் கவனம் செலுத்த வேண்டும்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் விலை நிர்ணயத்தை கம்பெனிகளுக்கு கொடுத்தது தான். இதனை செய்ததே காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும்போது தான். ஆனால் அப்போது அதனை விமர்சித்த பாஜக இன்று பதவியில் அமர்ந்த உடன் அதனை செய்கிறார்கள்.

இரண்டு கட்சிகளுமே மக்கள் விரோத கட்சிகள் தான். இருவருக்கும் ரகசிய கூட்டணி உள்ளது.
பாஜக ஆதரவுடன் சில காங்கிரஸ் தலைவர்கள் வெற்றி பெற திட்டமிட்டு வருகின்றன. விரைவில் இது தொடர்பான விரிவான தகவல்கள் வெளியாகக்கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x