Published : 11 Mar 2021 05:19 PM
Last Updated : 11 Mar 2021 05:19 PM

பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இரக்கமுள்ளவராக இருப்பர்: பிரதமர் மோடி புகழாரம்

பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இயற்கையாகவே இரக்கமுள்ளவர்களாக இருப்பர் என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

சுவாமி சித்பவானந்தரின் பகவத் கீதை பதிப்பு 5 லட்சத்துக்கும் மேல் விற்று சாதனை படைத்ததை அடுத்து, அதன் மின்னூல் பதிப்பு இன்று வெளியிடப்பட்டது. அப்பதிப்பைப் பிரதமர் மோடி காணொலி மூலம் வெளியிட்டார்.

அதைத் தொடர்ந்து அவர் பேசும்போது, ''பகவத் கீதையால் ஈர்க்கப்பட்டவர்கள் இயற்கையாகவே இரக்கமுள்ளவர்களாகவும் ஜனநாயக மனோபாவத்துடனும் இருப்பர். கீதை சிந்திக்கவும் கேள்வி கேட்கவும் சிந்திக்கவும் வைக்கிறது. இளைஞர்கள் பகவத் கீதையை வாசிக்க வேண்டும், ஏனெனில் இது வாழ்க்கைக்கான வழிகாட்டியாக விளங்குகிறது.

ஆத்மநிர்பர் பாரத்தின் முக்கிய நோக்கமே நமக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த மனித குலத்துக்கு நன்மை பயப்பதுதான். கடந்த காலங்களில் உலகத்துக்கு மருந்துகள் தேவைப்பட்டபோது இந்தியாவால் என்ன கொடுக்க முடியுமோ அதை அவர்களுக்கு அளித்தோம். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டுள்ளன. நாம் சமூகத்தைக் குணப்படுத்த மட்டுமல்லாமல் உதவவும் விரும்புகிறோம். இதைத்தான் பகவத் கீதையும் நமக்குப் போதித்தது'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

தமிழகத்தில் திருச்சியில் ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம் என்ற ஆசிரமத்தைத் தொடங்கியவர் சுவாமி சித்பவானந்தர். 1951-ல் இவர் எழுதிய கீதை உலகம் முழுவவதும் வரவேற்பைப் பெற்றதுடன் ஆங்கிலம், தெலுங்கு, ஒடியா, ஜெர்மன் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சித்பவானந்தர் 136 நூல்களை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x