Published : 15 Feb 2021 08:05 AM
Last Updated : 15 Feb 2021 08:05 AM

இன்று முதல் கட்டாயம்: வாகனங்களுக்கு பாஸ்டேக் இல்லாவிட்டால் சுங்கச்சாவடிகளில் இருமடங்கு கட்டணம் வசூல்

கோப்புப்படம்

புதுடெல்லி

நாடுமுழுவதும் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம் என்று நடைமுறை இன்று (பிப்.15) முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. பாஸ்டேக் இல்லாத வாகனங்கள் சுங்கச் சாவடிகளைக் கடக்க நேர்ந்தால், இருமடங்கு கட்டணத்தைச் செலுத்தவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் `பாஸ்டேக்' நடைமுறை கடந்த 2016-ம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டு கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் 'பாஸ்டேக்' கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் அவசாகம் அளி்க்கப்பட்டு பிப்ரவரி 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (பிப்ரவரி 15-ம்) தேதி நள்ளிரவு முதல் தேசிய நெஞ்சாலைகளைக் கடக்கும் வாகனங்கள் அனைத்துக்கும் பாஸ்டேக் கட்டாயம் என்ற உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், “தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கும் முறைக்குபதிலாக பாஸ்டேக் முறையை பிப்ரவரி 15-ம் தேதி முதல் கட்டாயக்கப்படுகிறது.

தேசிய நெடுஞ்சாலை விதிகல் 2008ன்படி, தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்கள் பாஸ்டேக் இல்லாமல் சென்றால், அந்த வாகனங்களிடம் இருமடங்கு கட்டணம் வசூலிக்கப்படும்.

பாஸ்டேக் முறைக்கு பணம் செலுத்தும் முறையை டிஜிட்டல் முறையில் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் வாகன ஓட்டிகள் சுங்கச்சாவடிகளில் நீண்டநேரம் காத்திருக்கத்த தேவையில்லை, எரிபொருள் செலவு மிச்சமாகும்.

இதன்படி பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்லும் வாகனங்கள் எம்(M) பிரிவிலும், சரக்கு ஏற்றவும், பயணிகளைச் ஏற்றிச் செல்லவும் பயன்படும் வாகனங்களுக்கு என்(N) பிரிவிலும் பாஸ்டேக் தரப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதலால், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளைக் கடக்கும் வாகனங்களில் பாஸ்டேக் இல்லாவிட்டால் வழக்கமாகச் செலுத்தும் கட்டணத்தைவிட இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x