Last Updated : 01 Feb, 2021 05:44 PM

 

Published : 01 Feb 2021 05:44 PM
Last Updated : 01 Feb 2021 05:44 PM

பாதுகாப்புத் துறைக்கு ரூ.4.78 லட்சம் கோடி ஒதுக்கீடு; உள்துறைக்கு ரூ.1.66 லட்சம் கோடி: பட்ஜெட்டில் அறிவிப்பு

கோப்புப்படம்

புதுடெல்லி

2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், பாதுகாப்புத்துறைக்கு ரூ.4.78 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கடந்த ஆண்டு ரூ.4.71 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டது.

மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 3-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார்.

அதில் கூறியிருப்பதாவது:

''மத்திய பட்ஜெட்டில் வரும் 2021-22ஆம் நிதியாண்டில் பாதுகாப்புத்துறைக்கு ரூ.4.78 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.4.71 லட்சம் கோடிதான் ஒதுக்கப்பட்டது. இதில் ராணுவத்தினர் மற்றும் பென்ஷன் ஆகியவற்றுக்காக ரூ.3.62 லட்சம் கோடியும், புதிய ஆயுதங்கள், விமானங்கள், போர்க்கப்பல்கள், ராணுவத் தளவாடங்கள் வாங்குவதற்காக ரூ.1.35 லட்சம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.1.13 லட்சம் கோடிதான் தளவாடங்கள் வாங்க ஒதுக்கப்பட்டிருந்தது

உள்துறை அமைச்சகத்துக்கு வரும் நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 66 ஆயிரத்து 547 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் புதிதாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களான ஜம்முவுக்கு ரூ.30,757 கோடியும், லடாக்கிற்கு ரூ.5,958 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிஆர்பிஎப், பிஎஸ்எப், சிஐஎஸ்எப் உள்ளிட்ட ஆயுதப் படையினருக்கு ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 802 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகைக் கணக்கெடுப்புப் பணிக்காக ரூ.3,768.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மேலாண்மைக்கு ரூ.481.61 கோடியும், பல்வேறு மத்திய திட்டங்களுக்காக ரூ.1,641.12 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சிபிஐ அமைப்புக்கு வரும் நிதியாண்டில் ரூ.835.49 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டில் ரூ.802.19 கோடி ஒதுக்கப்பட்ட து. ஆனால், திருத்தப்பட்ட மதிப்பீட்டில் ரூ.835.75 கோடியாக அதிகரிக்கப்பட்டது. நடப்பு ஆண்டைவிட வரும் நிதியாண்டில் ரூ.36 லட்சம் குறைக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x