Last Updated : 26 Jan, 2021 03:17 AM

 

Published : 26 Jan 2021 03:17 AM
Last Updated : 26 Jan 2021 03:17 AM

4 ஆண்டு சிறை தண்டனை முடிந்தது; மருத்துவமனையில் இருந்தபடியே சசிகலா நாளை விடுதலை: சிகிச்சைக்கு பிறகு தமிழகம் திரும்ப திட்டம்

சொத்துக்குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் விதித்த 4 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறைவு செய்துவிட்டு சசிகலா நாளை காலை 10 மணிக்கு விடுதலை ஆகிறார். அவர் சிகிச்சை பெறும் மருத்துவமனையிலே யே விடு தலை செய்யப்படுவதற்கான ஆவணங்களில் கையெழுத்துப் பெற சிறைத்துறை முடிவெடுத்துள்ளது.

சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை யும், ரூ.10 கோடியே 10 ஆயிரம் அபராதமும் விதித்து கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அதே ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதி பெங்களூருவில் உள்ள பரப்பன அக்ர ஹாரா சிறையில் சசிகலா உள்ளிட்ட மூவரும் சரணடைந்தனர். 4 ஆண்டுகளில் சசிகலா இருமுறை பரோலில் வெளியே வந்துள்ளார். அவரின் தண்டனைக் காலம் ஜன.27-ம் தேதியுடன் (நாளை) நிறைவடைவதாக சிறைத்துறை அறிவித்தது. இதையடுத்து சசிகலா தனக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை கடந்த நவம்பரில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் செலுத்தினார்.

இந்நிலையில், கடந்த 20-ம் தேதி அவருக்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டு பெங்க ளூருவில் உள்ள பவுரிங் அரசு மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக விக்டோரியா அரசு மருத்துவ மனைக்கு மாற்றப்பட்ட நிலையில், சசிகலா வுக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, விக்டோரியா மருத்துவ மனையின் மருத்துவ கண்காணிப்பாளர் ரமேஷ் கிருஷ்ணா நேற்று வெளியிட்ட அறிவிப் பில், ‘சசிகலாவுக்கு கரோனா அறிகுறிகள் முற்றிலுமாக நீங்கியுள்ளன. அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து கரோனா வார்டுக்கு அவரை மாற்றியுள்ளோம். ரத்த அழுத்தம், சர்க்கரையின் அளவு, ஆக்சி ஜன் அளவு 98 சதவீதமாக உள்ளது. அவருக்கு தேவையான உணவை அவரே வாய்வழியாக உண்கிறார். அவராகவே எழுந்து உட்காரு கிறார். ஊன்றுகோல் உதவியுடன் நடக்கிறார். சிகிச்சைக்கு நல்ல முறையில் ஒத்துழைக் கிறார். அவர் முழுவதும் குணமடைந்து மருத் துவமனையில் இருந்து வெளியே வர ஒருவார காலம் தேவைப்படலாம்’ என தெரிவித்தார்.

தமிழகம் திரும்புவதில் தாமதம்

இதையடுத்து, மருத்துவமனையில் இருந்தவாறு அவரிடம் கையெழுத்து பெற்று விடுதலை செய்யுமாறு சிறைத்துறையிடம் சசிகலாவின் வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். இதை பரிசீலித்த சிறைத்துறை நிர்வாகம், சசிகலாவை விடுதலை செய்வதற் கான ஆவணங்களை கர்நாடக உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. இதையடுத்து, 27-ம் தேதி காலை 10 மணிக்கு சசிகலாவிடம் மருத்துவமனையில் இருந்தவாறே விடுதலை செய்வதற்கான ஆணையில் சிறைத்துறை கையெழுத்து பெற்று அவரை விடுதலை செய்ய வேண்டும். அவரது உடைமைகளை வழக்கறிஞர் முன்னி லையில் உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தகவலை சிறைத் துறை அதிகாரிகள் மருத்துவர்கள் மூலம் சசிகலாவிடம் நேற்று பிற்பகலில் தெரிவித்தனர்.

இதனால் உற்சாகம் அடைந்துள்ள சசிகலாவின் உறவினர்கள், விடுதலைக்கு பிறகு அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்றலாமா அல்லது விக்டோரியா மருத்துவ மனையிலேயே சிகிச்சை அளிக்கலாமா என யோசித்து வருகின்றனர். சசிகலா நாளையே விடுதலை செய்யப்பட்டாலும் அவருக்கு கரோனா தொற்று இருப்பதால், பெங்களூருவில் மேலும் சில நாட்கள் தங்கி ஓய்வெடுக்க திட்டமிட்டுள்ளனர். பிப்ரவரி முதல் வாரத்தில் சசிகலா தமிழகம் திரும்புவார் என தெரிகிறது.

இதனிடையே, சிறையில் இருந்த இள வரசிக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவரும் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரும் நாளை விடு தலையாக உள்ளார். இதனால் சசிகலா, இளவரசி இருவரையும் தனியார் மருத்து வமனைக்கு மாற்ற இளவரசியின் மகன் விவேக் முயற்சித்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x