Published : 23 Jan 2021 03:15 AM
Last Updated : 23 Jan 2021 03:15 AM

கோயிலை தாக்கினால் மட்டும் மவுனம் ஏன்?- முதல்வருக்கு பவன் கல்யாண் கேள்வி

திருப்பதி: ஆந்திராவில் ஜனசேனா கட்சித் தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஆந்திராவில் 142 இந்து கோயில்கள் மீது மர்ம கும்பல் தொடர் தாக்குதல்கள் நடத்தி நாச வேலையில் ஈடுபட்டு வந்தாலும், முதல்வர் ஜெகன்மோகன் தலைமையிலான அரசு இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் உள்ளது. இது ஏன் என புரியவில்லை. இந்து கோயில்களை நாசம் செய்தால் ஒரு மாதிரியும், வேறு மத பிரார்த்தனை தலங்கள் மீது தாக்குதல் நடந்தால் அதனை வேறு மாதிரியும் எடுத்துக் கொள்வதுதான் அனைத்து மதத்தவரையும் சமமாக பார்ப்பதா ? திருப்பதி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் ஜனசேனாவோ அல்லது அதன் தோழமை கட்சியான பாஜகவோ கண்டிப்பாக போட்டியிடும்.

இவ்வாறு பவன் கல்யாண் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x