Last Updated : 26 Oct, 2015 02:34 PM

 

Published : 26 Oct 2015 02:34 PM
Last Updated : 26 Oct 2015 02:34 PM

கடற்படையில் பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு: மத்திய பாதுகாப்பு அமைச்சர் பாரிக்கர் அறிவிப்பு

இந்திய கடற்படையில் பெண் களின் பங்களிப்பு அதிகரிக்கப்படும் அதேசமயம் போரில் ஈடுபடுத்தப் பட மாட்டார்கள் என மத்திய பாது காப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று தொடங்கிய கடற்படை கமாண்டர்கள் கருத்தரங் கில் பங்கேற்ற மத்திய பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர் இதுதொடர்பாக செய்தியாளர் களிடம் கூறியதாவது:

இரவு நேரங்களில் கப்பல்கள், விமானந்தாங்கிகள் உள்ளி்ட்ட இடங்களைத் தவிர, விமானங்கள் எங்கு தேவைப்படுமோ அந்த இடங்களில் பெண்கள் பணிபுரிய அனுமதிக்கப்படுவர். இந்த அறிவிப்பு ஒரு சில நாட்களில் அமலுக்கு வரும் என்றார்.

ராணுவம் மற்றும் விமானப் படைகளில், ஆண்களைப் போல், பெண்களும், குறைந்தபட்சம், 20 ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வூதி யம் பெறும் வசதி உள்ளது.

ஆனால், கடற்படையில், பெண் கள் குறைந்தபட்சம், 10 அல்லது அதிகபட்சம், 14 ஆண்டுகள் மட்டுமே பணியாற்ற முடியும். இந்த பாரபட்சபோக்கை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் கடற்படையில் பெண்களுக்கு நிரந்தர பணி அளிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் 4-ம் தேதி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.இதைக்குறிப்பிட்ட அமைச்சர் பாரிக்கர், “டெல்லி உயர் நீதிமன்றத் தின் ஆணையுடன் இந்த அறி விப்பை ஒப்பிட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது” என்றார்.

கடல் சார் வேவுப்பணிகளில் ஈடுபடும் விமானங்களில் பெண் களை விமானிகளாகப் பயன்படுத் துவது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு கடற்படை பரிந்துரை செய்திருந்தது.

கடற்படையில் பெண்களை நிரந்தரமாக பணியமர்த்துவது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள் விக்கு, “கடற்படையில் கல்வி, சட்டம், கடல்சார் கட்டுமானம் ஆகிய பிரிவுகளில் மகளிரின் குறுகிய கால (14 ஆண்டுகள்-எஸ்எஸ்சி) பணியை நீண்டகால மாக மாற்ற 2008-ம் ஆண்டு கடற் படை அனுமதி அளித்தது. சாத்திய மான இடங்களில் பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே, டெல்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் முறையிடுவோம்” என பாரிக்கர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x