Published : 06 Jan 2021 08:55 AM
Last Updated : 06 Jan 2021 08:55 AM

பொது சுகாதார மையங்களில் பிஎஸ்ஏ பிராணவாயு தயாரிப்பு வசதி: பிஎம் கேர்ஸ் ரூ 201.58 கோடி ஒதுக்கீடு

புதுடெல்லி

பொது சுகாதார மையங்களில் 162 பிரத்யேக பிஎஸ்ஏ பிராணவாயு தயாரிப்பு வசதிகளை நிறுவ பிஎம் கேர்ஸ் நிதி அறக்கட்டளை ரூ 201.58 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

பிரதமரின் அவசரகால மக்கள் உதவி மற்றும் நிவாரண (பிஎம் கேர்ஸ்) நிதி அறக்கட்டளை, நாடு முழுவதும் உள்ள பொது சுகாதார மையங்களில் 162 பிரத்யேக அழுத்த விசை உறிஞ்சுதல் (பிஎஸ்ஏ) பிராணவாயு தயாரிப்பு வசதிகளை நிறுவ ரூ 201.58 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.

* இந்த வசதிகளை நிறுவுவதற்கும், மத்திய மருத்துவ விநியோக விற்பனைக்கூடத்தின் மேலாண்மை கட்டணமாகவும் ரூ 137.33 கோடியும், விரிவான வருடாந்திர பராமரிப்பு கட்டணமாக ரூ 64.25 கோடியும் செலவிடப்படும்

* மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி பெற்ற அமைப்பான மத்திய மருத்துவ விநியோக விற்பனைக்கூடத்தால் கொள்முதல் நடத்தப்படும்.

* 32 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் (பிற்சேர்க்கை-1) 154.19 மெட்ரிக் டன் மொத்த திறனுடன் 162 மையங்கள் நிறுவப்படும்.

* மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களுடன் ஆலோசித்த பின்னர் இந்த மையங்கள் நிறுவப்படவுள்ள அரசு மருத்துவமனைகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

* முதல் மூன்று வருடங்களுக்கு இந்த மையங்களுக்கு உத்தரவாதம் உண்டு. அடுத்த ஏழு வருடங்களுக்கு, விரிவான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தத்தின் கீழ் இவை வரும்.

* மருத்துவமனைகள்/மாநிலங்களால் வழக்கமான செயல்பாடுகளும், பராமரிப்பும் மேற்கொள்ளப்படும், விரிவான வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் முடிந்த பின்னர் ஒட்டுமொத்த செயல்பாடுகள் மற்றும் பராமரிப்பை மருத்துவமனைகள்/மாநிலங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

* இதன் மூலம் பொது சுகாதார கட்டமைப்பு இன்னும் வலுவடைந்து, குறைந்த விலையில் நீண்ட காலத்துக்கு மருத்துவ பிராணவாயு முறையாக கிடைப்பது உறுதி செய்யப்படும். தீவிர கொவிட்-19 மற்றும் இதர நோய்களுக்கான சிகிச்சைகளுக்கு, தேவைப்படும் போது போதுமான அளவில், தடையில்லா பிராணவாயு விநியோகம் அவசியமாகும்.

பொது சுகாதார மையங்களில் பிரத்யேக பிஎஸ்ஏ பிராணவாயு தயாரிப்பு வசதிகளை நிறுவுவதன் மூலம் பிராண வாயுவுக்காக காத்திராமல், இம்மையங்களே சொந்தமாக அதை உற்பத்தி செய்து கொள்ளலாம். மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களின் மொத்த பிராண வாயு திறனை இது அதிகரிப்பதோடு, பொது சுகாதார மையங்களில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் பிராண வாயு கிடைப்பதை உறுதி செய்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x