Last Updated : 25 Dec, 2020 01:03 PM

 

Published : 25 Dec 2020 01:03 PM
Last Updated : 25 Dec 2020 01:03 PM

விவசாயிகள் போராட்டத்தில் ஒரு வித்தியாசமான மனிதர்: 7,000 சீக்கியர்களுக்கு மேல் இலவசமாக தலைப்பாகை கட்டிவரும் தேஜந்தர்சிங்

மத்திய அரசிற்கு எதிராக டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகளுக்கு இடையே ஒரு வித்தியாசமான மனிதரான இருக்கிறார் தேஜந்தர்சிங். இவர் அங்குள்ள சீக்கியர்களுக்கு இதுவரையும் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட தலைப்பாகைகளை கட்டி வருகிறார்.

சீக்கியர்களின் மதக்கோட்பாடுகளில் முக்கியமாக இடம் பெற்றிருப்பது அவர்கள் தலைகளில் அணியும் ’பகடி’ எனும் தலைப்பாகை. இதை அன்றாடம் ஒரு புதிய தலைப்பாகை பல்வேறு நிறங்களில் கட்டப்படும்.

இவற்றை, எந்நேரமும் கட்டிக்கொண்டு தன்னையே அழகு பார்த்துக் கொள்வார்கள் இந்த சீக்கியவர்கள். இதில் ரெடிமேட் எனப்படும் தயாரான தலைப்பாகையை அணிவது சீக்கியவ்ர்கள் மதத்திற்கு எதிரானது.

குறைந்தது ஐந்து மீட்டர் நீளமுள்ள துணியிலான இந்த தலைப்பாகையை கட்டுவது என்பது சாதாரணமானது அல்ல. இதற்காக அதிக நேரம் ஒதுக்க வேண்டும் என்பதால், சீக்கியர்களின் புதிய தலைமுறை தலைப்பாகைகளை தவிர்க்கும் சூழலும் உருவாகி வருகிறது.

இதை தடுத்து தலைப்பாகை கலாச்சாரத்தை கட்டிக் காத்து வருகிறார் பஞ்சாபின் மன்ஸா மாவட்டத்தை சேர்ந்த தேஜந்தர்சிங். பஞ்சாபின் கிராமந்தோறும் செல்லும் இவர், அங்கு தலைப்பாகை கட்டத் தெரியாதவர்களுக்கு அதை சொல்லி கொடுத்து கட்டி விடுகிறார்.

இதனால், ‘டர்பன் மேன்(தலைப்பாகை மனிதர்)’ என்றழைக்கப்படுகிறார் இந்த தேஜந்தர்சிங். சமூகசேவகரான இவருக்கு டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டக் களம் நல்வாய்ப்பாகி விட்டது.

கடந்த டிசம்பர் 1 முதல் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிக்க டிக்ரிக்கு சென்றவர், தற்போது சிங்கு பகுதியில்

உள்ளார். இதுவரையும் சுமார் ஏழாயிரம் பேருக்கு தலைப்பாகை கட்டி விட்ட தேஜந்தருக்கு போராட்டக் களங்களில் விவசாயிகள் பெரும் வரவேற்பு அளிக்கின்றனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் தேஜந்தர்சிங் கூறும்போது, ‘தலைப்பாகை கட்ட வேண்டி தேவைப்படும் துணியையும் சில நேரம் நானே கையில் எடுத்துச் செல்கிறேன். இதற்காக, நான் துவக்கி நடத்தும் தலைப்பாகை வங்கிக்கு பஞ்சாபிகள் துணிகளையும் அளித்து உதவுகின்றனர்.’ எனத் தெரிவித்தார்.

இதனிடையே, சீக்கிய இளம் தலைமுறையினர் இந்த தலைப்பாகைகளை கட்டுவது கம்பீரத்தை காட்டுவதாகவும் கருதத் துவங்கி விட்டனர். இதை மேலும் அழகாக்க, மூன்றரை மீட்டர் நீளமுள்ள இரட்டை துணிகளால் கட்டுவது ‘டபுள் பகடி (இரட்டை தலைப்பாகை)’ என்றழைக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x