Published : 25 Dec 2020 03:15 AM
Last Updated : 25 Dec 2020 03:15 AM

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 22 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று: புதிய வகை வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியதா?

பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 22 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பாதி பேருக்கு புதிய வகை வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

பிரிட்டனில் தற்போது வேகமாக பரவிவருவது தென் ஆப்பிரிக்க வைரஸ் என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் இறுதியில் சீனாவின் வூஹானில் கரோனா வைரஸ் கண்டறியப் பட்டது. அங்கிருந்து ஐரோப்பிய நாடு களுக்கு வைரஸ் பரவியது. பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்தது. அதன்பின் கடந்த ஜூன், ஆகஸ்டில் வைரஸ் பரவல் படிப்படியாக குறைந்து, ஐரோப்பா முழுவதும் இயல்பு வாழ்க்கை திரும்பியது. ஆனால் கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகள் முழுவதும் மீண்டும் கரோனா வைரஸ் அதிவேகமாக பரவத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பிரிட்டனில் கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது.

இதுதொடர்பாக உலக சுகாதார அமைப்பும் பிரிட்டிஷ் விஞ்ஞானிகளும் ஆய்வு நடத்தினர். அப்போது பிரிட்டனில் கரோனா வைரஸின் மரபணு மாறி, புதிய வகை கரோனா வைரஸ் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது. பழைய கரோனா வைரஸை ஒப்பிடும்போது புதிய வகை கரோனா வைரஸ் பிரிட்டனில் 56 சதவீதம் வரை அதிவேகமாக பரவி வருகிறது.

தென்கிழக்கு பிரிட்டன் பகுதியான கென்ட்டில் முதல்முறையாக புதிய வகை கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக இந்த வைரஸ், ‘கென்ட் கரோனா வைரஸ்' என அழைக் கப்படுகிறது.

பிரிட்டனில் ஏற்கெனவே கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில் 60 சத வீதம் பேர் புதிய வகை கரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அந்த நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் பயணிகளில் 50 சதவீதம் பேர் புதிய வகை கரோனா வைரஸை பரப்பும் வாய்ப்புள்ளது என்று சுகாதாரத் துறை நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து பிரிட்டன் உட னான பேருந்து, ரயில், கப்பல், விமான போக்குவரத்தை உலக நாடுகள் தற் காலிகமாக ரத்து செய்துள்ளன. பிரிட்டனில் இருந்து வரும் அனைத்து விமானங்களையும் மத்திய அரசு வரும் 31-ம் தேதி வரை ரத்து செய்துள்ளது.

கடந்த சில வாரங்களில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியவர்கள் தேடி கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் தீவிர மாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களுக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பிய 22 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டது. இதில் பாதி பேருக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருக் கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதை உறுதி செய்ய அவர்களின் சளி மாதிரிகள் புனேவில் உள்ள ஆய்வகத் துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதிய வகை கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்த மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

தெ.ஆப்பிரிக்க வைரஸ்

பிரிட்டனில் தீவிரமாக பரவி வரும் புதிய வகை கரோனா வைரஸ், தென் ஆப்பிரிக்காவில் பரவி வரும் வைரஸின் தன்மையைக் கொண்டிருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

இத்தகவலை பிரிட்டனின் சுகாதாரத் துறை அமைச்சர் மாட் ஹான்காக் தெரி வித்துள்ளார். அவர் மேலும் கூறிய தாவது:

தென் ஆப்பிரிக்க அரசு ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டு தகவலை வெளிப் படையாக பகிர்ந்து கொண்டிருப்பது பாராட்டுக்குரியது. அவர்கள் தந்த தகவலின் அடிப்படையில்தான் புதிய வைரஸை கண்டறிய முடிந்தது. இங்கும் அத்தகைய வைரஸ் பாதிப்பு இருப் பதை உணர முடிந்தது. புதிய ரக வைரஸ் மிக எளிதாக பரவுவதோடு, அடுத்தடுத்து தன்னை உருமாற்றி வேறு வடிவமெடுப்பதும் சிகிச்சை அளிப் பதில் பெரும் சிக்கலை ஏற்படுத்தி யுள்ளதாக இங்கிலாந்து ஆய்வகத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறு மாட் ஹான்காக் தெரி வித்தார்.

பிரிட்டனில் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்திய சூழலிலும் நேற்று முன்தினம் மட்டும் அங்கு கரோனா தொற்றுக்கு ஆளானவர்கள் எண் ணிக்கை 36,804 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்று உச்சத்தில் இருந்த காலத்தில்கூட ஒரேநாளில் இந்த அள வுக்கு அதிகமானோர் பாதிக்கப்பட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. புதிய வகை கரோனா பரவல் அதிகரித் துள்ளதால் பிரிட்டனில் கிறிஸ்துமஸ், பாக்ஸிங் தின கொண்டாட்டங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ளது.

மேலும், தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் அனைத்து வகையான பொருட்கள், மனிதர்களுக்கு கடுமை யான கட்டுப்பாடுகளை விதிக்க பிரிட்டன் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 15 நாட்களில் தென் ஆப்பிரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டவர்கள், அங் கிருந்தவர்களுடன் தொடர்பில் இருந் தவர்கள் தங்களை உடனடியாக தனி மைப்படுத்திக் கொள்ளுமாறும் அறி வுறுத்தப்பட்டுள்ளது

புதிய கரோனா வைரஸை மாடர்னா தடுப்பூசி எதிர்க்கும்

கரோனா தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள மாடர்னா இன்கார்ப்பரேஷன் நிறுவனம், தங்களது மருந்து புதிதாக பரவி வரும் வைரஸையும் எதிர்க்கும் திறன் கொண்டது என அறிவித்துள்ளது.

புதிய கரோனா வைரஸ் வடிவமைப்பு அதன் செயல்பாடு குறித்து ஆய்வு செய்த பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் புதிய தொற்றுக்கு ஆளாகிறார்களா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களது தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்களுக்கு எவ்வித பாதுகாப்பு கிடைத்துள்ளது என்ற விவரம் வரும் வாரங்களில் தெரிய வரும் என்றும் மாடர்னா தெரிவித்துள்ளது. இந்நிறுவன தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு அமெரிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x