Last Updated : 29 Oct, 2015 08:06 AM

 

Published : 29 Oct 2015 08:06 AM
Last Updated : 29 Oct 2015 08:06 AM

மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜன் கைதான பின்பும் குறி வைக்கும் தாவூத்: இந்தியா கொண்டு வருவதில் ரகசியம் காக்கும் மத்திய அரசு

சோட்டா ராஜன் கைதான பின்பும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மூலமாக அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கருதப்படு கிறது. இதனால் ராஜனை இந்தியா கொண்டு வருவதில் பரம ரகசியம் காக்கப்படுகிறது.

இந்தோனேசியாவில் பாலி போலீஸாரின் கண்காணிப்பில் இருக்கும் சோட்டா ராஜனை இந்தியா கொண்டு வருவதற்கு மத்திய உள்துறை மற்றும் வெளியுற வுத் துறை அமைச்சகங்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. இவர்கள் குழுவுடன் மத்திய உளவுத்துறை மற்றும் சிபிஐ அதிகாரிகளும் பாலி செல்லவுள்ள நிலையில், அவர்களின் நட வடிக்கைகள் குறித்து மிகவும் ரகசியம் காக்கப்படுகிறது.

மும்பை நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிமுடன் சோட்டா ராஜனுக்கு பல ஆண்டுகளாக நிலவும் பகைமையே இதற்கு காரணமாகக் கூறப்படுகிறது. இத னால் தாவூதுக்கு பயந்து சோட்டா ராஜன் சரண் அடைந்திருக்கலாம் என்ற சர்ச்சை நிலவுகிறது.

இந்தச் சூழலில், சோட்டா ராஜன் கைது செய்யப்பட்ட பின்னரும் அவரை கொல்வதில் தாவூத் உறுதி யாக இருப்பதாகவும், தாவூதிடம் இருந்து ராஜனை காக்கும் பொருட்டு அவரை இந்தியா கொண்டு வருவதில் ரகசியம் காக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் ‘தி இந்து’ விடம் கூறும்போது, “பாலியிலும் தாவூதின் ஆட்களால் சோட்டா ராஜ னுக்கு ஆபத்து என்பதால் அவர் பாலியில் காவல்துறை தலைமை யகத்தில் வைக்கப்பட்டுள்ளார். இந்த ஆபத்து இந்தியாவிலும் தொடரும் என்பதால் ரகசியம் காக் கப்படுகிறது” என்று கூறுகின்றனர்.

மும்பையிலும் தாவூதின் ஆட் கள் இருப்பதாக கருதப்படுவ தால், சோட்டா ராஜனுக்கு போலீ ஸார் மூன்று அடுக்கு பாதுகாப்பு அளிக்கவும் முடிவு செய்திருப்ப தாக கூறப்படுகிறது.

இவர் பல்வேறு நாடு களிலும் போதை மருந்து கடத்தல் மற்றும் கொலை வழக்குகளால், சர்வதேச போலீஸான இண்டர் போலால் தேடப்படும் குற்ற வாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால், கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தோனேசியாவின் பாலி சுற்றுலா தலத்திற்கு மோகன் குமார் என்ற பெயரில் இந்திய போலி பாஸ்போர்ட்டில் வந்து இறங்கிய ராஜன் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டார். இவரை, பாதுகாப்பு கருதி தனி விமானத்தில் இந்தியா கொண்டு வர பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான அஜீத் தோவலின் நேரடி கண்காணிப்பில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியான தாவூத், பாகிஸ்தான் கராச்சியில் வசித்து வருவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், இதை பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வருகிறது. எனவே, இவரது பெரும்பாலான நடவடிக்கைகளில் அதிக கவனம் வைத்திருக்கும் சோட்டா ராஜனின் உதவியால் தாவூதை பிடிக்கலாம் என இந்திய அரசு நம்புகிறது.

மாண்டியாவில் பாஸ்போர்ட் கிடைத்தது எப்படி?

நிழலுலக தாதா சோட்டா ராஜன் (55) இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டபோது, அவரிடம் இருந்த பாஸ்போர்ட் கைப்பற்றப் பட்டது. அந்த பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது, சோட்டா ராஜன் கடந்த 2008-ம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி கர்நாடக மாநிலம் மாண்டியாவில் மோகன் குமார் என்ற பெயரில் பாஸ்போர்ட் பெற்றிருப்பது கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து கர்நாடக மாநில குற்றப்பிரிவு போலீஸார், 'மும்பையை சேர்ந்த சோட்டா ராஜனுக்கு மாண்டியா பாஸ் போர்ட் கிடைத்தது எப்படி?' என அதிர்ச்சி அடைந்தனர். இதை யடுத்து கடந்த 2008-ம் ஆண்டில் மாண்டியா மாவட்டத்தில் பாஸ் போர்ட் பெற்றவர்களின் பட்டி யலை ஆராய்ந்தனர்.

அதில் மோகன் குமார் என்ற பெயரில் யாரும் பாஸ்போர்ட் கோரி விண்ணப்பிக்கவில்லை. மாண்டியா போலீஸார் விசாரித்ததில் மோகன் குமார் பெயரில் யாரும் பாஸ்போர்ட் பெற வில்லை என தெரியவந்துள்ளது'' என்றார். இதே தகவலை பெங்க ளூரு மண்டல பாஸ்போர்ட் அலு வலக மேலாளர் கார்த்திகேயன் உறுதி செய்துள்ளார். எனவே சோட்டா ராஜன் போலி பாஸ் போர்ட்டை தயாரித்து பயன்படுத்தி இருக்கலாம். இருப்பினும் அந்த பாஸ்போர்ட்டை அவருக்கு தயாரித்து கொடுத்தது யார் என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x