Published : 21 Nov 2020 04:44 PM
Last Updated : 21 Nov 2020 04:44 PM

72-வது ஆண்டு விழாவை கொண்டாடும் தேசிய மாணவர் படை

உலகின் மிகப்பெரிய சீருடையணிந்த இளைஞர்கள் அமைப்பான தேசிய மாணவர் படை (என் சி சி), அதன் 72-வது ஆண்டு விழாவை 2020 நவம்பர் 22 அன்று கொண்டாடவிருக்கிறது.

தேசிய மாணவர் படை நிறுவப்பட்டு 72 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில், நாட்டுக்காக தங்களது இன்னுயிரை தியாகம் செய்த வீரர்களுக்கு தேசிய போர் நினைவுச் சின்னத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

தேசிய மாணவர் படை குடும்பத்தின் சார்பாக பாதுகாப்பு செயலாளர் டாக்டர் அஜய் குமார் மற்றும் தேசிய மாணவர் படை தலைமை இயக்குநர், லெப்டினென்ட் ஜெனரல் ராஜீவ் சோப்ரா ஆகியோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் பேசிய பாதுகாப்பு செயலாளர், கோவிட்-19 பெருந்தொற்றின் போது தேசிய மாணவர் படையினர் கொரோனா வீரர்களாக சிறப்பான சேவைகளை செய்ததாகவும், பெருந்தொற்றை எதிர்த்து போரிடுவதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் புகழாரம் சூட்டினார்.

'ஒரே பாரதம், ஒப்பற்ற பாரதம்', 'தற்சார்பு இந்தியா', மற்றும் 'ஃபிட் இந்தியா' ஆகிய இயக்கங்களில் முழு மனதோடு தேசிய மாணவர் படையினர் பங்கேற்றனர். டிஜிட்டல் எழுத்தறிவு, சர்வதேச யோகா தினம் மற்றும் மரம் நடுதல் ஆகிய அரசின் திட்டங்களிலும் தேசிய மாணவர் படையினர் பங்கேற்றனர்.

தேசிய மாணவர் படையை எல்லையோர மற்றும் கடலோரப் பகுதிகளில் விரிபடுத்துவது குறித்த அறிவிப்பு 2020 ஆகஸ்ட் 15 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் வெளியிடப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x