Published : 22 Oct 2015 08:11 AM
Last Updated : 22 Oct 2015 08:11 AM

எழுத்தாளர்களின் கவலையை பிரதமருக்கு தெரிவிக்க வேண்டும்: சாகித்ய அகாடமி தலைவருக்கு இந்திரா பார்த்தசாரதி கடிதம்

எழுத்தாளர்களின் கவலையை பிரதமருக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று சாகித்ய அகாடமி தலைவரிடம் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி கேட்டுக் கொண்டுள்ளார்.

கன்னட எழுத்தாளர் கல்புர்கி கடந்த ஆகஸ்டில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம் தாத்ரி யில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக பரவிய வதந்தியால் முஸ்லிம் முதியவர் அண்மையில் அடித்துக் கொல்லப்பட்டார்.

பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் கசூரியின் புத்தக வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்த எழுத்தாளர் சுதீந்திர குல்கர்னியின் முகத்தில் சிவசேனா தொண்டர்கள் கருப்பு மை தெளித் தனர். கடந்த 20-ம் தேதி டெல்லி சென்ற காஷ்மீர் எம்எல்ஏ ஷேக் அப்துல் ரஷீத் மீது மர்ம நபர்கள் கருப்பு மையைத் தெளித்தனர்.

இதுபோன்ற சம்பவங்கள் அண் மைக்காலமாக அதிகரித்து வரு கின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான எழுத்தாளர்கள் தங்களது சாகித்ய அகாடமி விருது களை திருப்பி அளித்து வரு கின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சாகித்ய அகாடமி தலைவர் விஸ்வநாத் பிரசாத் திவாரிக்கு தமிழகத்தைச் சேர்ந்த எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

அன்புள்ள பேராசிரியர் திவாரி, நான் ஓர் மூத்த இந்திய எழுத்தாளர், தமிழ் எழுத்தாளர். 1977-ல் நான் சாகித்ய அகாடமி விருதைப் பெற்றேன். 1988-க்கும் 1992-க்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக இருந்தேன். 1988-1990-ல் கலாச்சார நிறுவனங்களின் செயல்பாடுகள் தொடர்பாக அமைக் கப்பட்ட உயர்நிலை ஆய்வுக் குழுவில் பி.என். ஹக்ஸாரின் தலைமையின் கீழ் ஒரு உறுப் பினராக இருந்திருக்கிறேன். சாகித்ய அகாடமியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவன் நான் என் பதையும், இந்தக் கடிதத்தை எழுது வதற்கான முழுத் தகுதியும் உள்ளவன் என்பதையும் ஆணித்தர மாகச் சொல்வதற்காகத்தான் இதையெல்லாம் குறிப்பிட்டேன்.

பண்பாட்டு ரீதியிலும் அறிவுத் துறையிலும் சமூகத்தில் ஏற்பட்டி ருக்கும் வீழ்ச்சியைக் கண்டு வருத்தம் அடைந்திருக்கும் என்னைப் போன்ற ஒரு மூத்த எழுத்தாளரின் அக்கறையை, பிரக்ஞைபூர்வமான எழுத்தாளர் என்ற முறையில் உங்களால் நிச்சயம் புரிந்துகொள்ள முடியும் என்று நம்புகிறேன். மக்கள் தாங்கள் நம்பிக்கைகளுக்காகக் கொல்லப் படுகிறார்கள். தங்களின் உணவுப் பழக்கத்துக்காகவும் இன்ன பிற காரணங்களுக்காகவும் கொல்லப்படுகிறார்கள். மதத்தின் பெயரால் வன்முறை ஆதிக்கம் செலுத்தும்போது ஓர் எழுத்தாளர் எல்லாவற்றையும் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க முடியுமா? “வரலாற்றில், பல்வேறு நெறிகளையும் உள்வாங்கிக் கொண்டு, ஈடிணையற்ற சகிப்புத் தன்மையைப் பின்பற்றும் ஒரு சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று” என்று புகழ்பெற்ற இந்தியவியல் அறிஞர் டாக்டர் பாஷம் சொன்ன வார்த்தைகள் பொன்னெழுத்துக் களால் பொறிக்கப்பட வேண்டி யவை. அவற்றை நாம் மறந்து விட்டோமா?

இந்தியாவின் முதல் பிரதமர் நேருதான் சாகித்ய அகாடமியின் முதல் தலைவரும்கூட. அவருக்குப் பல பத்தாண்டுகளுக்குப் பிறகு அந்தப் பொறுப்புக்குத் தேர்ந்தெடுக் கப்பட்டவர் நீங்கள். நேருவும் ஓர் எழுத்தாளராக தனது சமூக, அறிவுலகப் பொறுப்பை நன்கு அறிந்திருந்தார்.

போரிஸ் பாஸ்டர்நாக் என்ற ரஷ்ய எழுத்தாளருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தபோது அந்தப் பரிசை வாங்குவதற்கு சுவீடனுக்குச் செல்ல விடாமல் சோவியத் ஒன்றியம் அவரைத் தடுத்தது. அப்போது, சோவியத் செய்வது தவறு என்று கண்டனம் தெரிவித்து சோவியத்தின் அந்நாள் அதிபர் குருச்சேவுக்கு நேரு ஒரு கடிதம் எழுதினார். எழுத்தாளர் என்ற முறையிலும் சாகித்ய அகாடமியின் தலைவர் என்ற முறையிலும்தான் நேரு அப்படிச் செய்தாரே தவிர இந்தியாவின் பிரதமர் என்ற முறையில் அல்ல. தனக்குப் பிறகு வரும் சாகித்ய அகாடமியின் தலைவர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு முன்னுதாரணத்தை அவர் ஏற்படுத்திச் சென்றிருக்கிறார். ஓர் அரசியல்வாதியாகத் தன்னிடம் அதிகாரம் இருக்கிறது என்பதை நேரு அறிந்திருந்தாலும் எது மிகவும் சக்தி வாய்ந்த ஆயுதம் என்று அறிந்து அதைத் தேர்ந்தெடுத்தார். ஆம், ‘வில்லைக் காட்டிலும் சொல்லே வலிமையானது’ எனப் பேனாவைத் தான் தேர்ந்தெடுத்தார் நேருஜி.

அக்டோபர் 23-ம் தேதியன்று செயற்குழு கூட்டத்தைக் கூட்டப் போகிறீர்கள் என்பதை அறிந்தேன். சாகித்ய அகாடமியைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சந்தேகத்துக்கு இட மில்லாமல் தங்கள் தரப்பைத் தெரி விக்க இது அருமையான தருணம். மதத்தின் பெயரால் உருவாக்கப் பட்ட சகிப்பின்மையற்ற பிரிவினை வாதச் சூழலைக் கடுமையாகக் கண்டித்துத் தீர்மானம் இயற்றப்பட வேண்டும். இந்த நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப் பப்பட்ட மதங்களைப் பின்பற்றவும் விருப்பபட்ட உணவை உட்கொள்ள வும் உரிமை இருக்கிறது. இந்த உரிமை நமது அரசியலமைப்பால் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மதத்தின் பெயரால் நிகழ்த்தப் படும் வன்முறையை அரசு சகித் துக்கொண்டிருக்காது என்ற திட்ட வட்டமான எச்சரிக்கையை அரசு விடுக்க வேண்டும். கருத்துரிமை, மதவுரிமை ஆகிய புனிதமான உரிமைகளில் எந்தக் குழுவேனும் குறுக்கீடு செய்யுமென்றால் அக்குழுவினரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

சாகித்ய அகாடமியின் தலைவ ராக இருக்கும் நீங்கள், எழுத்தாளர் களின் கவலைகளையும் கருத்துக் களையும் தெரியப்படுத்தி பிரதமருக்கு கடிதம் எழுத வேண்டும். ‘வளர்ச்சி’ என்பதைத் தாண்டி, நமது மாபெரும் தேசத்தில் பண்பாட்டுரீதியிலான கண்ணிய மும் நுண்ணுணர்வும் கொண்ட ஒரு சூழல் நிலவுவதை பிரதமர் உத்தரவாதப்படுத்த வேண்டும்.

செயற்குழு கூட்டத்தின்போது எனது இந்தக் கடிதத்தில் நான் எழுதியவற்றை எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x