Last Updated : 14 Oct, 2015 07:51 AM

 

Published : 14 Oct 2015 07:51 AM
Last Updated : 14 Oct 2015 07:51 AM

சாகித்ய அகாடமி விருதை திருப்பி அனுப்பும் போராட்டத்தில் இணைந்தார் ரஹமத் தரிகெரே

கன்னட எழுத்தாளரும், ஹம்பியில் உள்ள கன்னட பல்கலைக்கழக கன்னடத்துறை தலைவருமான ரஹமத் தரிகெரே தமது சாகித்ய அகாடமி விருதை நேற்று திருப்பி அனுப்பியுள்ளார். அத்துடன் ரூ. 1 லட்சம் பணத்துக்கான காசோலை, பொன்னாடை, நினைவு பரிசு ஆகியவற்றையும் சாகித்ய அகாடமியின் தலைவர் விஸ்வநாத் திவாரிக்கு அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக எழுத்தாளர் ரஹமத் தரிகெரே நேற்று பெல்லாரியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கன்னட எழுத்தாளரும், அறிஞரு மான எம்.எம்.கல்புர்கி படுகொலை செய்யப்பட்டார். சாகித்ய அகாடமி யின் வளர்ச்சிக்காக பல்வேறு வழிகளில் உதவிய கல்புர்கி படு கொலையை பெயரளவுக்கு கூட சாகித்ய அகாடமி கண்டிக்க வில்லை.

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி ஆகியோரின் படுகொலை கருத்து சுதந்திரத்துக்கு எதிரான மதவாதிகளின் வெறிச் செயல். இந்த செயலை மனித நேயத்தோடு சாகித்ய அகாடமி கண்டித்திருக்க வேண்டும்.

இதே போல தாத்ரி கிராமத்தில் மாட்டிறைச்சி உண்டதாக இஸ்லாமிய முதியவர் அடித்தே கொல்லப்பட்டிருக்கிறார்.

இச்சூழலில் அறிவுஜீவிகள் நிறைந்த ஜனநாயக அமைப்பான சாகித்ய‌ அகாடமியின் மவுனம் மிகுந்த வேதனையை தருகிறது. எனவே சாகித்ய அகாடமியின் விருதையும், பரிசுத்தொகை உள்ளிட்ட அனைத்தையும் திருப்பி அனுப்புகிறேன்''என்றார்.

பஞ்சாபி எழுத்தாளர்

இந்த வரிசையில் பிரபல பஞ்சாபி எழுத்தாளர் தாலிப் கவுர் திவானாவும் தனது பத்ம  விருதை திருப்பி அளிக்கப்போவதாக நேற்று அறிவித்தார்.

பாட்டியாலாவில் உள்ள பஞ்சாபி பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற பேராசிரியையான அவர் பல்வேறு நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். அவரை கவுரவிக்கும் வகையில் கடந்த 2004-ம் ஆண்டில் பத்ம  விருது வழங்கப்பட்டது.

இதுவரை 16-க்கும் மேற்பட்டோர் தங்களது சாகித்ய அகாடமி விருதை திருப்பி அனுப்பியுள்ளனர். 7-க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள் கன்னட சாகித்ய பரிஷத் விருதை, திருப்பி அனுப்பியுள்ளனர்.

ஷசிதேஷ் பாண்டே மற்றும் அரவிந்த் மாளகத்தி ஆகியோர் அகாடமியில் தாங்கள் வகித்த பதவிகளை ராஜினாமா செய் துள்ளன‌ர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x