Published : 10 Nov 2020 03:11 AM
Last Updated : 10 Nov 2020 03:11 AM

மாநிலம் முழுவதும் 55 மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு: பிஹாரில் இன்று வாக்கு எண்ணிக்கை

பிஹார் சட்டப்பேரவைத் தேர்த லில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவு கள் அறிவிக்கப்பட உள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

பிஹாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதி களுக்கு 3 கட்டங்களாக தேர் தல் நடத்தப்பட்டது. அக்டோ பர் 28-ம் தேதி 71 தொகுதி களுக்கும், கடந்த 3-ம் தேதி 94 தொகுதிகளுக்கும், 7-ம் தேதி 78 தொகுதிகளுக்கும் வாக் குப்பதிவு நடந்தது. கரோனா காலகட்டத்தில் நடத்தப்பட்ட முதல் தேர்தல் என்பதால் பாதுகாப்பைவிட, கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப் பட்டது. வாக்குப்பதிவுக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் வழங்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக கூட்டணிக்கும் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

கடந்த 7-ம் தேதி மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் பல்வேறு ஊட கங்கள் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டன. இதில் முதல் வர் நிதிஷ் குமாருக்கு பின்ன டைவு ஏற்படும் என்றும் லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையிலான எதிர்க் கட்சி கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மாநிலம் முழுவதும் 55 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடக் கிறது. இந்த மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக வாக்கு எண்ணிக்கையில் சிறிது காலதாமதம் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப் படும். அதன்பிறகு காலை 8.30 மணிக்கு மின்னணு வாக் குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப் படும். காலை 9 மணி முதல் முன் னணி நிலவரங்கள் தெரிய வரும். எனினும் மதியம் 12 மணிக்கு பிறகே யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்பதை உறுதியாக கணிக்க முடியும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x