Published : 07 Nov 2020 03:14 AM
Last Updated : 07 Nov 2020 03:14 AM

பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்படுகிறது: 26 மணிநேர கவுன்ட்டவுன் தொடக்கம்

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் பாய தயாராக உள்ள பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட்.

இஓஎஸ்-1 உள்ளிட்ட 10 செயற்கைக்கோள்களுடன் இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் இன்று மாலை (நவ.7) விண்ணில் ஏவப்படுகிறது.

புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன இஓஎஸ்-1 செயற்கைக்கோளை பிஎஸ்எல்வி சி-49 ராக்கெட் மூலம்விண்ணில் செலுத்த இஸ்ரோதிட்டமிட்டது.

இன்று மாலை 3.02 மணிக்கு

இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து இன்று (நவ.7) மாலை 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்படஉள்ளது.

இந்நிலையில் ராக்கெட் ஏவுதலின் இறுதிக்கட்ட பணிகளுக்கான 26 மணி நேர கவுன்ட்டவுன்நேற்று மதியம் 1.02 மணிக்கு தொடங்கியது. அதன் பின்னர் திட, திரவ எரிபொருள் நிரப்புதல்உள்ளிட்ட பணிகளை விஞ்ஞானிகள் குழு தொடங்கியது.

முதன்மை செயற்கைக்கோளான இஓஎஸ், விவசாயம், பேரிடர் மேலாண்மை, காடுகள்கண்காணிப்பு ஆகிய பணிகளுக்கு பயன்படும். இதிலுள்ள சிந்தடிக் அப்ரேச்சர் ரேடார் மூலம் அனைத்து பருவநிலையிலும் படங்களை எடுக்க முடியும்.

இந்த ராக்கெட்டில் லிதுவேனியாவின் ஒரு செயற்கைக்கோள்,லக்சம்பர்க் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த தலா 4 என மொத்தம்9 வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வணிகரீதியாக விண்ணில் செலுத்தப்படுகின்றன.

பார்வையாளர் அனுமதி இல்லை

நடப்பு ஆண்டு கரோனா தொற்று காரணமாக, ராக்கெட் ஏவுதலை பார்வையாளர்கள் நேரடியாக காண அனுமதியில்லை. இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையதளம் (https://www.isro.gov.in/) மற்றும் முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஒளிபரப்பு செய்யப் படும்.

இதைத் தொடர்ந்து டிசம்பரில் எஸ்எஸ்எல்வி ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x