Published : 29 Oct 2015 07:58 AM
Last Updated : 29 Oct 2015 07:58 AM

மனித கருமுட்டை இறக்குமதிக்கு தடை: வாடகைத் தாய் வர்த்தகம் பாதிக்கும்

மனித கருமுட்டைகளை இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவில் பிரபலமாக இருக்கும் வர்த்தக ரீதியான வாடகைத் தாய் முறைக்கு பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மனிதக் கருமுட்டை (எம்ப்ரியோ) இறக்குமதிக்கு தடை குறித்த அறிக் கையை மத்திய சுகாதார அமைச் சகம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்டதாக, உச்ச நீதிமன்றத் தில் நேற்று சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் தெரிவித்தார்.

வர்த்தக ரீதியான வாடகைத் தாய் முறைக்கு இந்தியா சர்வதேச மையமாக மாறி வரும் சூழலில், மனித கருமுட்டை இறக்குமதியை நிறுத்தி வைக்கும்படி அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து இம்முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஜெய வாட் என்ற வழக்கறிஞர் மனு தாக்கல் செய்திருந்தார். ‘இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ரூ.2,889 கோடி அளவுக்கு வாடகைத் தாய் வர்த்தகம் நடைபெறுகிறது. மருத் துவ காரணங்களுக்காக மனித கருமுட்டைகளை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும், இதனைப் பயன்படுத்தி சில மருத்துவர்கள் சட்ட விரோத மாக, வாடகைத் தாய் முறையை பின் பற்றி வருகின்றனர்’ என அம் மனுவில் தெரிவித்திருந்தார்.

இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், என்.வி. ரமணா ஆகியோரடங்கிய அமர்வு கடந்த 15-ம் தேதி, வாட கைத் தாய் வர்த்தகத்தை சட்டப்படி முறைப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக எடுக்கப்பட் டுள்ள நடவடிக்கை குறித்து விளக்க மளிக்க அக்டோபர் 28-ம் தேதி வரை மத்திய அரசுக்கு உச்ச நீதி மன்றம் கெடு விதித்திருந்தது. முற்றிலும் தடை விதித்தால் சில பாகுபாடுகள் ஏற்படும் என அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் வாதிட்டார்.

இதைக் கேட்ட நீதிபதிகள் “அப் படியானால் சட்டமியற்றும்வரை, மனித கருமுட்டை மருத்துவ காரணங்களுக்காகத்தான் இறக்கு மதி செய்யப்படுகிறது, வாடகைத் தாய் முறைக்காக அல்ல என்பதை வரையறை செய்யுங்கள். நீண்ட நாட்களாக இதுதொடர்பான சட்டம் இல்லை. நீங்கள் மனித கருமுட்டை வர்த்தகத்துக்கு அனுமதி அளிக்காமல் இருக்கலாம். ஆனால், வாடகைத் தாய் சுற்றுலா என அழைக்கப்படும் இவ்விவகாரம் தற்போது மிகப்பெரிதாகி உள்ளது” என தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார், “வர்த்தக ரீதியான வாடகைத் தாய் முறையை முறைப்படுத்துவதற்கான சட்டத்தை அறிமுகம் செய்வது குறித்து ஆலோ சனைகள் நடந்து வருகின்றன. இதனை மத்திய அமைச்சரவைக்கு பரிந்துரை செய்ய மூன்று மாத காலம் அவகாசம் தேவைப்படும். இதுதொடர்பாக அரசின் நிலைப் பாடு குறித்து விளக்கமளிக்கவும், மருத்துவ காரணங்களுக்காக மட்டும் மனித கருமுட்டைகளை இறக்குமதி செய்யும் வகையில் கட்டுப்பாடு கொண்டுவருவது குறித்து தெரிவிக்கவும் அவகாசம் வேண்டும்” என பதிலளித்தார்.

“தார்மீக மற்றும் நீதிநெறி விவ காரங்கள் இதில் இணைந்துள்ளன. இது நாடாளுமன்றத்தின் பிரதான கடமை. துரதிருஷ்டவசமாக அரசு அல்லது நாடாளுமன்றத் திடமிருந்து எவ்வித எதிர்வினை யும் இல்லை. அரசின் பொறுப் புடைய பகுதியில் அனைத்துப் பிரச்சினைகளிலும் நாங்கள் உத்தர விடவேண்டிய சூழல் உருவாகி யுள்ளது” என நீதிபதிகள் தெரி வித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தின் ஆனந்த் நகரில், வாடகைத் தாய்களுக்காக இயங்கி வரும் மருத்துவ மையத்தில் பராமரிக்கப்படும் வாடகைத் தாய்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x