Published : 13 Oct 2015 08:37 AM
Last Updated : 13 Oct 2015 08:37 AM

மும்பையில் தாக்குதல் நடத்தும் சதியுடன் ஊடுருவல்: 3 மர்ம நபர்கள் பேசியதை கேட்டு போலீஸை உஷார்படுத்திய ஆட்டோ டிரைவர்

மும்பையில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் 3 மர்ம நபர்கள் ஊடுருவிய தகவல் ஆட்டோ டிரைவர் மூலம் தெரியவந்துள்ளது. இதையடுத்து, கம்ப்யூட்டரில் படம் வரைந்து நகர் முழுவதும் போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

மும்பையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சவுரப் பால் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 34. இவருடைய ஆட்டோவில் கடந்த வெள்ளிக்கிழமை 3 பேர் சவாரி சென்றுள்ளனர். அவர்கள் பேசியதை கேட்ட பால் அதிர்ச்சி அடைந்தார். மும்பையில் தாக்கு தல் நடத்த அவர்கள் சதி திட்டத் துடன் ஊடுருவியது போல் பேசி உள்ளனர். அதன்பிறகு முலுந்த் போலீஸ் நிலையம் சென்று நடந்த விவரத்தை கூறியிருக்கிறார்.

ஆட்டோ டிரைவரின் தகவலுக்கு மிக முக்கியத்துவம் அளித்த போலீஸ் அதிகாரிகள் உடனடியாக தீவிரவாத தடுப்பு படைக்கு (ஏடிஎஸ்) தகவல் தெரி வித்தனர். இதையடுத்து ஏடிஎஸ் அதிகாரிகள் போலீஸார் இணைந்து சவுரப் பாலிடம் தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் ஏடிஎஸ் படை யினர், குற்றப் பிரிவு போலீஸார், உள்ளூர் போலீஸார் ஆகியோர் இணைந்து மும்பை முழுவதும் 3 மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து ஏடிஎஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சவுரப் பால் ஆட்டோவில் கடந்த வெள்ளிக்கிழமை 3 பேர் பயணம் செய்துள்ளனர். அவர்களிடம் 3 பெரிய சூட்கேஸ்கள் இருந்துள் ளன. சியான் மேம்பாலம் அருகே அவர்கள் ஆட்டோவில் ஏறியுள்ள னர். அங்கிருந்து ஐரோலி டோல் நகா பகுதியில் 3 பேரும் இறங்கி உள்ளனர்.

ஆட்டோவில் செல்லும்போது, யாரிடமோ 3 பேரும் செல்போனில் மலாய் மொழியில் பேசி வந்துள்ள னர். ஆட்டோ டிரைவர் சவுரப் பால் 4 ஆண்டுகள் மலேசியாவில் வேலை செய்திருக்கிறார். அதனால் அவருக்கு மலாய் மொழி தெரிந்துள்ளது. 3 மர்ம நபர்களில் ஒருவருக்கு மட்டும் மலாய் மொழி தெரியவில்லை. மற்ற 2 பேரும் மலாய் மொழியில் பேசியுள்ளனர்.

தவிர பஞ்சாபி வட்டார வழக்கை உருது மொழி கலந்து பேசியுள்ள னர். சவுரப் பால் பஞ்சாபில் சில காலம் வேலை செய்திருக்கிறார். அதனால் பஞ்சாபி வட்டார வழக்கும் தெரிந்துள்ளது. பஞ்சாபில் அறை எடுத்து தங்கியிருந்தபோது அவருடன் வேறு சிலரும் தங்கி இருக்கின்றனர். அவர்களும் மர்ம நபர்கள் பேசியது போலவே பேசி யிருக்கின்றனர். அவர்கள் பாகிஸ் தான் எல்லை பகுதியை சேர்ந்தவர் கள் என்று கூறியிருக்கின்றனர். மர்ம நபர்கள் 3 பேரும்கூட பாகிஸ்தான் எல்லை அருகே உள்ள பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று சந்தேகப்படுகிறோம்.

மும்பையில் தாக்குதல் நடத்தும் திட்டம் பற்றி மலேசியா வில் இருப்பவருடன் 3 மர்ம நபர்கள் பேசி வந்ததாக சவுரப் பால் கூறுகிறார். மேலும், அவர் களில் ஒருவன், ‘வேலை முடிந்த தும் உன் குடும்பத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அஹா (மர்ம நபர்) இருக்கிறார், கவலைப் படாதே. அதேபோல் கசாப் குடும் பத்தையும் நாங்கள் பார்த்து கொள் கிறோம்’ என்று செல்போனில் பேசியிருக்கிறார்.

இதை கேட்டு சந்தேகம் வலுத்த தால் சவுரப் பால் உடனடியாக போலீஸில் தகவல் கூறியிருக் கிறார். 3 மர்ம நபர்கள் பற்றியும் அவர்கள் பேசிய தகவல்கள் குறித்தும் விவரமாக சவுரப் பால் கூறியதால் உயரதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப் பட்டது.

அதன்பிறகு மும்பை நகர் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள் ளது. மேலும், சவுரப் சொன்ன அடையாளங்களை வைத்து 2 மர்ம நபர்களின் உருவங்களை கம்ப்யூட்டரில் வரைந்துள்ளோம்.

அந்த படங்களை மும்பை தானே மாவட்டத்தில் குடிசைப் பகுதிகள், லாட்ஜ்கள் மற்றும் ஓட்டல் களில் கொடுத்து சந்தேகப்படும் படி யாராவது வந்தால் தகவல் தெரிவிக்கும்படி கேட்டுக் கொண் டுள்ளோம். போலீஸ் இன்பார்மர் களுக்கும் இந்தத் தகவல்களை சொல்லி 24 மணி நேரமும் கண் காணிப்புடன் செயல்படும்படியும் ஏதாவது தகவல் கிடைத்தால் உட னடியாக தொடர்பு கொள்ளும் படியும் அறிவுறுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு தீவிரவாத தடுப்பு படை அதிகாரி தெரிவித்தார்.

டிரைவரின் மனைவி அதிருப்தி

போலீஸுக்கு தகவல் சொன்ன ஆட்டோ டிரைவர் சவுரப் பால் முலுந்த் பகுதியில் வசிக்கிறார். அவரிடம் தகவல் அறிய பத்திரிகையாளர்கள் அவருடைய வீட்டுக்கு சென்றனர். ஆனால், சவுரப் அங்கு இல்லை. அதுபற்றி அவருடைய மனைவி கூறியதாவது:

மர்ம நபர்கள் பற்றி தகவல் சொன்ன பிறகு, போலீஸார் திடீர் திடீரென வந்து என் கணவரை விசாரணைக்காக அழைத்து சென்று விடுகின்றனர். அதனால் கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து அவரால் வேலைக்கு செல்ல முடியவில்லை. எதற்காக அத்தனை முறை கேள்வி கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.

கம்ப்யூட்டரில் வரையப்பட்ட மர்ம நபர்களின் போட்டோக்களை என்னிடமே காட்டி, உனக்கு இவர்களை தெரியுமா என்று கேட்கின்றனர். வெள்ளிக்கிழமை நான் மருத்துவமனையில் இருந்தேன். என்னிடம் இதுபற்றி என் கணவர் எதுவும் சொல்லவில்லை. எனக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் அவர் கவலையில் இருந்தார். அதனால் மர்ம நபர்கள் பற்றி என்னிடம் சொல்லாமல் இருந்திருப்பார்.

இவ்வாறு சவுரப் மனைவி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x