Published : 13 Oct 2020 02:03 PM
Last Updated : 13 Oct 2020 02:03 PM

இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ சேவை; தமிழகம் தொடர்ந்து முன்னிலை

புதுடெல்லி

இ-சஞ்சீவனி தொலைதூர மருத்துவ சேவையை பயன்படுத்துவதில் நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி தளத்தில் 5 லட்சத்துக்கும் அதிகமான தொலைதூர மருத்துவ ஆலோசனைகள் இதுவரை நாடு முழுவதும் வழங்கப்பட்டு உள்ளன.

இதில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இவற்றில் ஒரு லட்சம் ஆலோசனைகள் கடந்த 17 நாட்களில் அளிக்கப்பட்டுள்ளன. இ-சஞ்சீவனி வெளிநோயாளி பிரிவு தற்போது 216 ஆன்லைன் வெளிநோயாளர் பிரிவு சேவைகளை வழங்குகிறது.

தமிழ்நாட்டில் 169977 தொலைதூர ஆலோசனைகளும், உத்திரப் பிரதேசத்தில் 134992 தொலைதூர ஆலோசனைகளும் இ-சஞ்சீவனி தளத்தின் மூலம் நடைபெற்றுள்ளன.

கோவிட்-19 பெருந்தொற்றின் போது பயனாளிகளின் தனிநபர் இடைவெளியை உறுதி செய்து பல்வேறு அத்தியாவசிய மருத்துவ சேவைகளை இ-சஞ்சீவனி வழங்கியுள்ளது.

மக்களுக்கு மருத்துவ சேவையை வழங்குவதற்காக இந்த கைபேசி செயலியை 25- க்கும் அதிகமான மாநிலங்கள் பயன்படுத்தியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x