Last Updated : 01 Sep, 2015 08:19 AM

 

Published : 01 Sep 2015 08:19 AM
Last Updated : 01 Sep 2015 08:19 AM

கன்னட எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கில் சிபிஐ விசாரணைக்கு கர்நாடக அரசு பரிந்துரை

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள கன்னட எழுத்தாளர் எம்.எம்.கல்புர்கியின் கொலை வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வேண்டும் என கர்நாடக அரசு பரிந்துரை செய்துள்ளது. அங்கு அதிகரித்துவரும் இந்துத்துவா அடிப்படைவாதிகளை ஒடுக்க புதிய கொள்கை வகுக்கவும் மாநில அரசு முடிவு செய்துள்ளது.

சாகித்ய அகாடமி விருது பெற்ற கன்னட எழுத்தாளரும் ஹம்பி கன்னட பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தருமான எம்.எம்.கல்புர்கி (77) கர்நாடக மாநிலம் தார்வாடில் உள்ள கல்யாண்நகரில் வசித்து வந்தார். மூடநம்பிக்கைக்கு எதிராக பேசிவந்த அவர், நேற்று முன்தினம் காலை மர்ம நபர்க ளால் கொடூரமாக சுட்டுக் கொல்லப் பட்டார்.

இதையடுத்து தார்வாட் மாவட்ட காவல் ஆணையர் ரவீந்திர பிரசாத் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, தனிப்படை அமைத்து விசாரணையை தொடங்கினார். கைரேகை நிபுணர்களும் தடய வியல் அதிகாரிகளும் கல்புர்கி யின் வீட்டில் தடயங்களை சேகரித்தனர். மேலும் போலீஸார் மோப்ப நாய்களின் உதவியுடன் தகவல்களை சேகரித்தனர். முதல் கட்ட விசாரணையில் கொலை யாளிகள் கல்புர்கிக்கு மிக அருகில் இருந்து அவரது நெற்றியிலும் மார்பிலும் 3 தோட்டாக்களால் சுட்டது தெரியவந்தது.

இந்நிலையில் தார்வாட் கேசிடி மைதானத்தில் வைக்கப்பட்டிருந்த கல்புர்கியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் சித்தரா மையா, ''மூட நம்பிக்கைக்கு எதிராக துணிச்சலுடன் கருத்துகளை தெரிவித்துவந்த எழுத்தாளர் கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன். சிறந்த அறிஞரான கல்புர்கி கன்னட இலக்கியத்துக்கு ஒப்பற்ற சேவையை செய்துள்ளார். அவரது மறைவால் கன்னட இலக்கியத் துறை மீளாத் துயரில் ஆழ்ந்துள் ளது. இந்த கொடூர சம்பவம் தொடர் பாக முறையான விசாரணை நடைபெற்று, குற்றவாளிகள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படு வார்கள்'' என்றார்.

சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை

இந்நிலையில் மறைந்த எழுத் தாளர் கல்புர்கியின் குடும்பத்தாரும் கன்னட எழுத்தாளர்களும், ''மூட நம்பிக்கைக்கு எதிராகவும், உருவ வழிபாட்டுக்கு எதிராகவும் போராடிய கல்புர்கிக்கு பஜ்ரங்தளம், ராம் சேனா, விஸ்வ ஹிந்து பரிஷத், ஹிந்து ஜகர்ன வேதிகே உள்ளிட்ட இந்துத்துவா அமைப்பினர் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.

தனிப்பட்ட முறையில் யாரையும் புண்படுத்தாத கல்புர்கிக்கு யாரும் எதிரிகள் இல்லை. அவருக்கு தனிப் பட்ட முறையில் எந்த குடும்ப பிரச்சி னையும் இல்லை. கல்புர்கிக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்துத் துவா அடிப்படைவாதிகளே கொலை செய்திருக்க வாய்ப்பிருக் கிறது. எனவே கர்நாடக அரசு சிஐடி அல்லது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் ''என கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நேற்று காலை கர்நாடக அரசு, கல்புர்கியின் கொலை வழக்கு சிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றப்படுவதாக ஆணை வெளியிட்டது.

இந்நிலையில் நேற்று மாலை கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா கூறியபோது, ''எழுத் தாளர் கல்புர்கியின் கொலை ஜனநாயகத்துக்கு விடுக்கப்பட்ட சவால். இந்த கொடூர சம்பவம் நடந்ததால் கர்நாடக மாநில‌த்துக்கு பெரும் களங்கம் ஏற்பட்டுள்ளது. ஒருவர் தனது கருத்தை தெரிவிக்க முழு உரிமை இருக்கிறது. அதற்காக ஒருவரை கொலை செய்வது மனிதத் தன்மை அற்றது.

இத்தகைய மனிதத் தன்மை யற்ற நிலையை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க முடியாது. சமீபகாலமாக மத அடிப்படைவாதிகளின் ஆதிக்கத் தால் கடலோர கர்நாடகாவில் அமைதி குலைந்துள்ளது. குறிப்பாக இந்துத்துவா அடிப்படை வாதிகளின் அச்சுறுத்தலால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஒடுக்க புதிய கொள்கை களை வகுக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

கன்னட அறிஞர்களின் கோரிக் கையை ஏற்று, கல்புர்கி கொலை வழக்கை சிஐடி விசாரணையில் இருந்து மாற்ற அரசு முடிவெடுத் துள்ளது. எனவே இவ்வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்குமாறு அரசின் சார்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x