Last Updated : 04 Oct, 2020 11:54 AM

 

Published : 04 Oct 2020 11:54 AM
Last Updated : 04 Oct 2020 11:54 AM

மதுரா கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகிலுள்ள ஷாயி ஈத்கா மசூதியை அகற்றும் விவகாரம்: மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு

உ.பி.யின் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலும் அதை ஒட்டியபடி ஷாயி ஈத்கா மசூதியில் அமைந்திருப்பதை காட்டும் படம்

மதுரா


உத்தரப்பிரதேசம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலுக்கு அருகே இருக்கும் ஷாயி ஈத்கா மசூதியை அகற்றக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மனுதாரர்கள் முடிவு செய்துள்ளனர்.

லக்னோவைச் சேர்ந்த ரஞ்சனா அக்னிஹோத்ரி உள்ளிட்ட 5 மனுதாரர்கல் மாவட்ட நீதிமன்றத்தில் வரும்வாரத்தில் மேல்முறையீடு செய்ய உள்ளனர்.

உ.பி.யின் மதுரா கோயிலை கிருஷ்ணஜென்மஸ்தான் சேவா சன்ஸ்தானும், அதன் அருகிலுள்ள மசூதியை ஷாஹி ஈத்கா மேனேஜ்மெண்ட் கமிட்டி ஆகியவை நிர்வகித்து வருகின்றன. இவ்விரண்டின் இடையே கடந்த 1968 ஆம் ஆண்டில் ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது.

அதில், கோயிலும், மசூதியும் அருகருகில் மதநல்லிணக்கத்தை போற்றும் வகையில் இருக்கும் என்பது முக்கியமாக இருந்தது. இந்த ஒப்பந்தத்தை, மதுரா மாவட்ட சிவில் நீதிமன்றத்தால் கடந்த ஜூலை 20, 1973 இல் ஏற்கப்பட்டு பதிவு செய்து செயல்பாட்டில் உள்ளது.

இந்த சூழலில் அந்த ஒப்பந்தம் தவறான காரணங்களுக்காக போடப்பட்டது என்றும், இதை ரத்து செய்து மசூதி அமைந்துள்ள 13.37 ஏக்கர் நிலத்தையும் கிருஷ்ண ஜென்மபூமி கோயிலிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் மதுரா சிவில் நீதிமன்றத்தில் விஷ்வ இந்து பரிஷத்திற்கு நெருக்கமான வழக்கறிஞர் ரஞ்சனா அக்னிஹோத்ரி உள்ளிட்ட 5 பேர் சார்பில் இம்மனு செப்டம்பர் 26ம் தேதி மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கான வரலாற்று ஆதாரமாக ஜாதுநாத் சர்கார் எழுதிய நூல் உள்ளிட்ட பலவும் சமர்ப்பித்திருந்தனர். இதில், அங்கிருந்த கிருஷ்ணன் கோயில் முகலாய மன்னன் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டு அதன் ஒருபகுதியில் 1669-70 ஆம் ஆண்டில் ஷாயி ஈத்கா மசூதியை கட்டியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

மதுராவின் சிவில் நீதிமன்றத்தில் இந்த கடந்த 30-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவைவிசாரித்த சிவில் நீதிமன்ற நீதிபதி சாயா சர்மா, இந்த மனுவை விசாரணை செய்ய முகாந்திரம் இல்லை எனக் கூறி தள்ளுபடி செய்தார்.

இந்த வழக்கு குறித்து மனுதாரரின் வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் கூறுகையில் “ நாங்கள் விரைவில் மாவட்ட நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். சிவில் நீதிமன்றத்தின் தீர்ப்பு சட்டத்துக்கும், பல்வேறு உண்மைக்கும் மாறானது. மாவட்ட நீதிமன்றத்தில் அடுத்த வாரம் மேல்முறையீட்டில் நல்ல முடிவைப் பெறுவோம்” எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x