Last Updated : 17 Sep, 2020 07:39 AM

 

Published : 17 Sep 2020 07:39 AM
Last Updated : 17 Sep 2020 07:39 AM

பெங்களூரு ஐஎம்ஏ நிறுவன மோசடி வ‌ழக்கில் 2 ஐபிஎஸ் உட்பட 5 போலீஸார் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்

பெங்களூருவில் நகைக் கடை அதிபர் முகமது மன்சூர் கான் ஐஎம்ஏ என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி வந்தார். இதன்மூலம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மோசடி செய்தது தெரியவந்தது.

இது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில் நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்செய்துள்ளது. அதில் கூறியிருப் பதாவது:

ஐஎம்ஏ நிறுவனம் வாடிக்கை யாளர்களின் வைப்பு நிதியில் ரூ.4 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக மோசடி செய்துள்ளது. இதில் நகைக் கடை அதிபர் முகமது மன்சூர் கானுக்கு பெங்களூரு கிழக்கு மண்டலத்தில் பணியாற் றிய காவல் துறை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளனர். 1998 பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியும் பெங்களூரு மாநகர கூடுதல் ஆணையருமான ஹேமந்த் நிம்பல்கர் மற்றும் 2008 பேட்ஜ்ஐபிஎஸ் அதிகாரியும் கர்நாடகரிசர்வ் படை துணை கண்காணிப் பாளருமான அஜய் ஹில்லாரி ஆகிய இருவரும் விதிமீறலில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர பெங்களூரு கிழக்கு மண்டல துணைகண்காணிப்பாளர் சந்தீப், கமர்சியல் தெரு காவல் ஆய்வாளர் ரமேஷ், உதவி காவல் ஆய்வாளர் கவுரி சங்கர் உள்ளிட்டோரும் ஐஎம்ஏ நிறுவனத்துக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.

இந்த 5 பேர் மீதும் கர்நாடக அரசின் ஊழல் மற்றும் நிதி நிறுவன‌ வாடிக்கையாளர்களின் விதி மீறல் சட்டம் 2004-ன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ள‌து.

ஐபிஎஸ் அதிகாரிகள் ஹேமந்த் நிம்பல்கரும், அஜய் ஹில்லாரியும் ஐஎம்ஏ நிறுவனத்தின் திட்டத்துக்கு எதிராக பல்வேறு புகார்கள்வந்தபோதும், அதனை விசாரிக்கவில்லை. இதற்காக காவல் துறைஅதிகாரிகள் ஐஎம்ஏ நிறுவனத்திடம் இருந்து கோடிக்கணக்கில் பணமாகவும் பொருளாகவும் லஞ்சம் பெற்றுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x