Last Updated : 12 Sep, 2015 07:28 AM

 

Published : 12 Sep 2015 07:28 AM
Last Updated : 12 Sep 2015 07:28 AM

மின்வெட்டு பிரச்சினை எதிரொலி: தமிழக அரசிடம் மின்சாரம் வாங்க கர்நாடகா முடிவு - ஜெயலலிதாவை சந்திக்கிறார் கர்நாடக அமைச்சர்

கர்நாடகாவில் நிலவும் மின்வெட்டு பிரச்சினையை சமாளிக்க தமிழக அரசிடம் கூடுதல் மின்சாரம் வாங்க அம்மாநில அரசு முடிவெடுத் துள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்களை சந்தித்து பேச கர்நாடக மின்சாரத் துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் திட்டமிட்டுள்ளார்.

இது தொடர்பாக டி.கே. சிவக் குமார் ‘தி இந்து'விடம் கூறியதாவது:

கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுவதால் கடந்த 25 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு மின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பருவ மழை பொய்த்து, அணைகளின் நீர்மட்டம் 50 சதவீதத்துக்கு கீழாக குறைந்ததால் நீர்மின் நிலையங்கள் முழுவதுமாக முடங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு தொழில் நுட்ப கோளாறுகளின் காரணமாக மின் உற்பத்தியில் மந்த நிலை ஏற்பட்டுள்ளது.

கர்நாடகா மாநிலம் முழுவதுக் கும் நாளொன்றுக்கு 9 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தேவைப்படு கிறது. மின் உற்ப‌த்தி பாதிக்கப் பட்டுள்ளதால் நாளொன்றுக்கு 3500 மெகவாட் மின்சார‌ம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் 2 முதல் 4 மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுகிறது. இந்த நிலை இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடர வாய்ப்புள்ளது. எனவே மத்திய அரசிடம் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் மின்சாரம் வாங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மின் பற்றாக்குறையை சமா ளிக்க ஆந்திரா தமிழக அரசிடம் இருந்து 200 மெகாவாட் முதல் 500 மெகாவாட் மின்சாரம் வாங்கு கிறது. இதே போல கர்நாடகாவும் தமிழக அரசிடம் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் வாங்க முடி வெடுத்துள்ளது. இது தொடர்பாக அம்மாநில மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் வேறு சில அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

தேவைப்பட்டால் பிரதமர் நரேந்திர மோடியையும், தமிழக முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்து பேசுமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா எனக்கு அனுமதி அளித்துள்ளார். கர்நாட காவின் நிலையை எடுத்துக்கூறி மத்திய மின் தொகுப்பிலிருந்து கூடுதல் மின்சாரம் வழங்குமாறு பிரதமருக்கு கடிதம் எழுதியுள் ளேன்.

இதே போல தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து கர்நாட காவின் மின் பற்றாக்குறையை எடுத்துக்கூறி, 500 மெகாவாட் முதல் 1000 மெகாவாட் மின்சாரத்தை வாங்க திட்டமிட்டுள்ளேன். இதே போல கேரளா, மகாராஷ்டிரா அரசு களுடனும் பேச்சு நடத்தி வரு கிறோம். கர்நாடகாவின் மின்சார தேவையை பூர்த்தி செய்ய அனைத்து மாநிலங்களிடம் இருந்தும் 50 மெகாவாட் முதல் 100 மெகாவாட் மின்சாரம் கூட வாங்க தயாராக இருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x