Last Updated : 28 Aug, 2020 10:47 AM

 

Published : 28 Aug 2020 10:47 AM
Last Updated : 28 Aug 2020 10:47 AM

மீண்டும் ஒரே நாளில் 77,000த்திற்கும் அதிகமான கரோனா பாதிப்பு; 1057 பேர் மரணம்: சுகாதார அமைச்சகம் தகவல்

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது, கடந்த 24 மணி நேரத்தில் 77 ஆயிரத்து 266 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதையடுத்து பாதிப்பு எண்ணிக்கை 33 லட்சத்து 87 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.

முந்தைய நாளில் 75 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவினால் பாதிக்கப்பட்டனர். நேற்றும் 77 ஆயிரத்தைக் கடந்தது , ஆறுதல் தரும் செய்தி குணமடைந்தோர் எண்ணிக்கை 25 லட்சத்து 83 ஆயிரத்து 948 ஆக அதிகரித்துள்ளது.

மத்திய சுகாதார அமைச்சக தகவல்களின் படி கடந்த 24 மணி நேரத்தில் 1,057 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர், இதனையடுத்து கரோனா பலி எண்ணிக்கை 61 ஆயிரத்து 529 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் விகிதம் 76.28% ஆக உள்ளது, கரோனா பலி விகிதம் மேலும் குறைந்து 1.82% ஆக உள்ளது.

நாட்டில் தற்போது 7 லட்சத்து 42 ஆயிரத்து 23 பேர் கரோனா சிகிச்சையில் இருக்கின்றனர். மொத்த கரோனா பாதிப்பில் இது 21.90% ஆகும்.

கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவில் ஆகஸ்ட் 7ம் தேதி 20 லட்சத்தைக் கடந்தது, பிறகு ஆகஸ்ட் 23ம் தேதி 30 லட்சத்தைக் கடந்தது.

ஐசிஎம்ஆர் தகவல்களின் படி மொத்தமாக இதுவரை 3 கோடியே 94 லட்சத்து 77 ஆயிரத்து 848 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 901,338 சாம்பிள்கள் பரிசோதிக்கப்பட்டன.

கடந்த 24 மணி நேரத்தில் பலியான 1057 பேரில் மகாராஷ்ட்ராவில் அதிகபட்சமாக 355 பேர் பலியாகியுள்ளனர் இதனையடுத்து மகாராஷ்ட்ரா பலி எண்ணிக்கை 23,344 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடாகவில் கடந்த 24 மணி நேரத்தில் 141 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 5,232 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 109 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 6948 ஆக உள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 68 பேர் பலியாக மொத்த பலி எண்ணிக்கை 3217 ஆகவும், மேற்கு வங்கத்தில் நேற்று மேஉம் 53 பேர் பலியாக மொத்த இறப்பு எண்ணிக்கை 3017 ஆகவும் உள்ளது.

டெல்லியில் மேலும் 22 பேர் இறக்க, பலி எண்ணிக்கை 4369 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் 17 பேர் மரணமடைய பலி எண்ணிக்கை 2962 ஆக அதிகரித்துள்ளது, ஆந்திராவில் 92 பேர் பலியாக அங்கு இறப்பு எண்ணிக்கை 3,633 ஆக அதிகரித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x