Published : 26 Aug 2020 06:35 AM
Last Updated : 26 Aug 2020 06:35 AM

மகாராஷ்டிரா கட்டிட விபத்தில் 13 பேர் உயிரிழப்பு; இடிபாடுகளில் இருந்து 60 பேர் காயங்களுடன் மீட்பு

மகாராஷ்டிராவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 60 பேர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில், 20-க்கும் மேற்பட்டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள தாக தெரிகிறது.

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் கஜல்புரா பகுதியில் இருந்த 5 மாடி குடியிருப்பு கட் டிடத்தில் 45-க்கும் மேற்பட்ட குடும் பங்கள் வசித்து வந்தன. இந்நிலை யில், நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் இந்தக் கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்புப் படையினரும் பேரி டர் மீட்புப் படையினரும் அப் பகுதிக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். அதிக அளவில் இடிபாடுகள் இருந்த தாலும், வெளிச்சம் இல்லாததாலும் மீட்புப் பணிகள் தாமதமாகின.

இருந்தபோதிலும், மின் விளக்குகள் வெளிச்சத்தில் கிரேன் களின் உதவியுடன் மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டன. இதுவரை 13 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 60 பேர் காயங்களுடன் மீட்கப் பட்டு அங்குள்ள தனியார் மருத் துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள னர். மேலும் 20-க்கும் மேற்பட் டோர் கட்டிட இடிபாடுகளில் சிக்கி யிருக்கலாம் என பேரிடர் மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர். அவர்களை உயிருடன் மீட்பதற் காக கட்டிட இடிபாடுகளுக்குள் ஆக்சிஜன் வாயு செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

இதனிடையே, இந்த விபத்து தொடர்பாக கட்டிடத்தின் ஒப்பந்த தாரர் யூனஸ் ஷைக், வடி வமைப்பாளர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பிரதமர் இரங்கல்

இந்த சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனு தாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரை வில் குணமடைய பிரார்த்திக் கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x