Last Updated : 12 Sep, 2015 08:23 AM

 

Published : 12 Sep 2015 08:23 AM
Last Updated : 12 Sep 2015 08:23 AM

மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி: பெங்களூரு மேயர் பதவியை காங்கிரஸ் கைப்பற்றியது

பெங்களூரு மாநகராட்சி மேயராக காங்கிரஸ் கட்சியின் மஞ்சுநாத் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை மேயர் பதவிக்கு மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியை சேர்ந்த ஹேமலதா கோபாலய்யா தேர்வு செய்யப்பட்டார்.

பெங்களூரு மாநகராட்சியில் மொத்தம் உள்ள 198 வார்டு களுக்கு கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 100, காங்கிரஸ் 76, மஜத 14, மற்றவை 8 வார்டுகளை கைப்பற் றின. மேயர், துணை மேயர், நிலைக் குழு தலைவர் உள்ளிட்ட‌ பதவிகளை கைப்பற்ற 131 உறுப் பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில், எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை.

இதையடுத்து காங்கிரஸ், பாஜக ஆகிய இரு கட்சிகளும் முன்னாள் பிரதமர் தேவகவுடா வின் மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) கட்சியுடன் கூட்டணி பேச்சு வார்த்தை நடத்தின. இரு கட்சி களும் 8 சுயேச்சை உறுப்பினர் களின் ஆதரவையும் நாடின. மேலும் மேயர் தேர்தலில் வாக்களிக்கும் பெங்களூரை சேர்ந்த எம்எல்ஏ.க்கள், எம்எல்சி.க்கள் மற்றும் எம்பி.க்களின் ஆதரவையும் கோரின.

இந்நிலையில் காங்கிரஸுக்கு தேவகவுடா ஆதரவு தெரிவித்தார். மேலும் 7 சுயேச்சை உறுப்பினர்களும் காங்கிரஸுக்கு ஆதரவளிக்க முன்வந்தனர்.

இந்நிலையில் மேயர் தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் பி.என். மஞ்சுநாத் ரெட்டி 131 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துணை மேயராக மஜத கட்சியை சேர்ந்த ஹேமலதா கோபாலய்யா வெற்றிபெற்றார். மேயர் பதவிக்கு போட்டியிட்ட பாஜக வேட் பாளர் மஞ்சுநாத் ராஜூ 128 வாக்கு களைப் பெற்று தோல்வியடைந்தார்.

பாஜக ஆர்ப்பாட்டம்

மாநகராட்சித் தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றியும், மேயர் தேர்தலில் தோல்வி அடைந்ததால் பாஜகவினர் அதிர்ச்சி அடைந்தனர். எனவே காங்கிரஸ், மஜத கூட்டணியை கண்டித்து மாநகராட்சி அலுவலகம் முன் முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

இதே போல டவுன் ஹால் எதிரே கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x