Published : 21 Jul 2020 01:51 PM
Last Updated : 21 Jul 2020 01:51 PM

தென்னாப்பிரிக்காவுக்கு 20.60 மெட்ரிக் டன்கள் மலேரியா மருந்து: இந்தியா அனுப்பியது

மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கு, 20.60 மெட்ரிக் டன் டிடிடி மருந்தை எச்ஐஎல் நிறுவனம் தென்னாப்பிரிக்காவிற்கு அனுப்பியுள்ளது.

மத்திய ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சகத்தின் பொதுத் துறை நிறுவனமான எச்ஐஎல் (இந்தியா) நிறுவனம், தென்னாப்பிரிக்க அரசின் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்கு 20.60 மெட்ரிக் டன் டிடிடி மருந்தை அனுப்பியுள்ளது.

எச்ஐஎல் இந்தியா நிறுவனம், உலகளவில் டிடிடி மருந்தின் ஒரே உற்பத்தியாளராக உள்ளது. இந்த நிறுவனம் மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் மலேரியா கட்டுப்பாட்டுத் திட்டத்திற்காக, டிடிடி மருந்தை உற்பத்தி செய்யவும், விநியோகிக்கவும், 1954 ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.

கடந்த 2019-2020-ல் இந்த நிறுவனம் நமது நாட்டில் உள்ள 20 மாநிலங்களுக்கு இந்த மருந்தை விநியோகித்துள்ளது. மேலும், ஆப்பிரிக்க நாடுகள் உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதியும் செய்து வருகிறது.

தென்னாப்பிரிக்க அரசின் சுகாதாரத் துறை மொசாபிக்கிற்கு அருகில் உள்ள 3 மாகாணங்களில் டிடிடி மருந்தைப் பயன்படுத்தி வருகிறது. இந்தப் பிராந்தியம், மலேரியாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது, சில ஆண்டுகளாக இறப்பு விகிதமும் அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x