Last Updated : 21 Jul, 2020 12:24 PM

 

Published : 21 Jul 2020 12:24 PM
Last Updated : 21 Jul 2020 12:24 PM

ஆக்ஸ்போர்டு கரோனா வாக்சின்: முடிவுகள் முதற்கட்ட தடைகளை வெற்றிகரமாகக் கடந்து விட்டது- இந்திய மருத்துவ நிபுணர்கள் உற்சாகம்

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கோவிட்-19 தடுப்பு மருந்தின் மானுட சோதனைகளின் முதற்கட்ட முடிவுகள் குறித்து இந்திய மருத்துவ உற்சாகமடைந்து வரவேற்றுள்ளனர். மேலும் இறுதிச் சோதனைகள் நிச்சயம் பலன் தரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ஆக்ஸ்போர்டு கரோனா வாக்சின் மருத்துவ சோதனைதான் இதுவரையிலான கரோனா மருத்துவ வாக்சின் சோதனைகளில் அறிவியல்பூர்வமானது மற்றும் வெளிப்படையானது என்று இந்திய மருத்துவர்கள், நோய்க்கிருமி நிபுணர்கள் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

அப்போலோ மருத்துவ்மனை மூத்த மருத்துவ ஆலோசகர் டாக்டர் சுரஞ்ஜித் சாட்டர்ஜி கூறும்போது, “ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் முதற்கட்ட ஆய்வு முடிவுகள் வரவேற்புக்குரியதாக உள்ளன. உலக அளவில் நடத்தப்படும் வாக்சின் ஆய்வுகளில் இதுதான் பெரிய அளவில் விஞ்ஞான ரீதியாகச் செய்யப்பட்டு வருகிறது, இதுதான் நம்பகத்தன்மையுடன் கூடியதாக உள்ளது.

உலகின் மற்ற வாக்சின் மருத்துவ சோதனைகளை விடவும் ஆக்ஸ்போர்டு சோதனையின் வடிவமைப்பு, திட்டம், 18-55 வயதுடையோர் மீதான் பலதரப்பட்ட மக்களிடத்தில் சோதனை என்று இதுதான் அறிவியல்பூர்வமாக உள்ளது. இந்த வாக்சின் சோதனை முடிவுகள் நல்ல நம்பிக்கை அளிக்கின்றன, இறுதி முடிவுகள் நம் தேவையைப் பூர்த்தி செய்யும். இறுதி தீர்ப்பை நாம் வழங்கும் முன் இன்னும் கொஞ்சம் காத்திருக்க வேண்டி உள்ளது ” என்றார் அவர்.

ஆஸ்ட்ராஸெனெகா உருவாக்கி வரும் இந்த வாக்சின் பற்றிய மருத்துவ சோதனைத் தரவு, பாதுகாப்பானது என்றும் உடல் நோய் எதிர்ப்பாற்றல் வினையாற்றுகிறது என்றும் சில பங்கேற்பாளர்களுக்கு மட்டும் சிறிய அளவில் பக்க விளைவுகள் இருந்தன என்றும் விஞ்ஞானிகள் நேற்று அறிவித்தனர்.

முதல் 1 மற்றும் 2 கட்ட ஆய்வுகளின் முதற்கட்ட முடிவுகள் லான்செட் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது. இதில் 1107 ஆரோக்கியமான நபர்களுக்கு மருந்து செலுத்தி சோதனை நடத்தப்பட்டது., இதில் ஆன்ட்டி பாடிகள் வழியாகவும் டி-செல்கள் வழியாகவும் நோய் எதிர்ப்பாற்றலை வாக்சின் தூண்டி விடுவது தெரியவந்துள்ளது.

நொய்டாவில் உள்ள ஃபோர்ட்டிஸ் மருத்துவமனையின் டாக்டர் மிரிணால் சர்க்கார் இந்த ஆக்ஸ்போர்டு வாக்சின் மீது நம்பிக்கை தெரிவித்தார். தடுப்பு மட்டும்தான் நம் கையில் உள்ளது, ஆனால் மக்கள்தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும், பாதுகாப்பு கவசங்களைக் கைவிடுதல் கூடாது, என்றார்.

வாக்சினை உருவாக்கி அதனை மருத்துவச் சோதனைகளைக் கடந்து கொண்டு செல்வது மாரத்தான் ரேஸ் போன்றது, ஆக்ஸ்போர்டு வாக்சின் தன் முதல் தடையை வெற்றிகரமாகக் கடந்துள்ளது. வாக்சின் பந்தயத்தில் இது வெல்லும் என்ற நம்பிக்கை உள்ளது என்று மற்ற மருத்துவ நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x