Last Updated : 22 Sep, 2015 08:27 AM

 

Published : 22 Sep 2015 08:27 AM
Last Updated : 22 Sep 2015 08:27 AM

சீனா, பாகிஸ்தானுடன் நல்லுறவை விரும்புகிறோம்: இந்தியாவுக்கு நாடு பிடிக்கும் ஆசை இல்லை - உள்துறை அமைச்சர் ராஜ்நாத் தகவல்

அண்டை நாடுகளுடன் நல் லுறவைப் பேணவே இந்தியா விரும்புகிறது. எல்லையை விரிவு செய்யும் ஆசை இந்தியாவுக்கு இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவுடனான இந்திய எல்லைப் பகுதிகளை உள்துறை அமைச்சர் ராஜ்நாத் மூன்று நாட்கள் பார்வையிடுகிறார்.

இந்தோ திபெத் எல்லைப் பாது காப்புப் படை நிகழ்ச்சியொன்றில் அவர் பேசியதாவது:

இந்தியா தனது எல்லைகளைப் பாதுகாத்துக் கொள்ளவே விரும்பு கிறது. எல்லைக்கு அப்பாலிருந்து வரும் ஊடுருவல்கள், வரம்பு மீறல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

அண்டை நாடுகளுடன் உறவை மேம்படுத்துவதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா தயார். ஆனால், கவுரவம் மற்றும் கண்ணியத்தில் சமரசம் செய்துகொள்ள முடியாது.

சீனா, பாகிஸ்தானுடன் நல் லுறவை விரும்புகிறோம். இந்த இரு நாடுகளுடன் இந்தியாவின் உறவு மேம்படாவிட்டால், ஆசியா வில் அமைதி நிலவாது. இந்த கண்டம் வளர்ச்சியை நோக்கி பயணிக்காது.

எல்லைப் பிரச்சினைகளோ அல்லது பயங்கரவாதமோ எதுவாகினும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்பதே என் கருத்து. இந்தியா அமைதியை நேசிக்கும் நாடு. நாங்கள் எங்களின் எல்லையைப் பாதுகாத்துக் கொள்ள மட்டுமே விரும்புகிறோம்.

எல்லையை விரிவுபடுத்தும் நாடாக இந்தியா ஒருபோதும் இருந்ததில்லை. இனிமேலும் இருக்கப்போவதில்லை. இதை இவ்வளவு உறுதியாக நான் ஏன் சொல்கிறேன் என்றால், தனது எல்லைக்குள் மட்டுமல்ல, எல் லைக்கு அப்பாலிருப்பவர்களை யும் சக குடிமக்களாகக் கருதிய சாதுக்களும், ஞானிகளும் அவதரித்த ஒரே பூமி இந்தியா.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தத்துவத்தை இந்த உலகுக்கு அளித்தவர்கள் நாம். எனவேதான் அனைவருடனும் நல்ல உறவைப் பேண விரும்புகிறோம்.

சீனாவுடன் மட்டுமல்ல, அனைத்து அண்டை நாடுகளுட னும் ஆத்மார்த்தமான உறவை விரும்புகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜம்மு பகுதியில் இந்திய பாகிஸ்தான் எல்லையில், எல் லைப் பாதுகாப்பு படை வீரர்களு டன் (பிஎஸ்எஃப்), இந்தோ திபெத் பாதுகாப்புப் படை வீரர்களும் கூடு தலாக பணியமர்த்தப்படவில்லை என்பதை ராஜ்நாத் மறைமுகமாக மறுத்துள்ளார்.

பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், “அண்டை நாடுகளுடன் நல்ல உறவை விரும்புகிறோம் என நான் கூறியிருக்கிறேன். நல்ல உறவு கட்டமைக்கப்பட வேண்டும். பாகிஸ்தான் இதற்காக முன்வர வேண்டும். இந்தியா தயாராக இருக்கிறது.

இந்திய குடிமக்களுக்கு மீண்டும் ஒன்றை உறுதியாகக் கூறுகிறேன். நாட்டின் பாது காப்பு, கவுரவம், கண்ணியத் தில் நமது அரசு சமரசம் செய்து கொள்ளாது” என்றார்.

அவர் மேலும் கூறியதாவது:

இந்தியா பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளின் கொடி அமர்வு கூட்டத்தின் மூலம் சாதகமான விளைவுகள் ஏற்படும் என நம்புகிறேன்.

பாகிஸ்தான் தரப்பு இயக்குநர் ஜெனரல் என்னை சந்தித்த போது இதுதொடர்பாக உறுதி யளித்திருக்கிறார். எல்லை அத்துமீறல்களால் உயிரிழந்தவர் களின் குடும்பத்துக்கு இந்திய அரசு நிவாரண உதவியாக ரூ. 5 லட்சம் அளிக்கிறது.எல்லையோரத் தில் பதுங்கு குழிகள் அமைப்பது தொடர்பாக விரைவில் முடிவெடுக் கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x