Last Updated : 06 Jul, 2020 09:27 AM

 

Published : 06 Jul 2020 09:27 AM
Last Updated : 06 Jul 2020 09:27 AM

கரோனாவை ‘முடிவுக்கு கொண்டுவரும் தொடக்கம்’: இந்தியாவின் கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை குறித்து மத்திய அரசு கருத்து


கரோனா வைரஸுக்கு தடுப்பு மருந்தாக உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கோவாக்ஸின், ஜைகோவ்-டி ஆகிய மருந்துகளின் பரிசோதனை என்பது கரோனா வைரஸை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொடக்கம் என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது

மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவகத்தின் இணையதளத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் விஞ்ஞானி டி.வி. வெங்கடேஸ்வரன் என்பவரால் கட்டுரை பதிவிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது

உலகளவில் 140க்கும் மேற்பட்ட தடுப்பூசிகளின் தயாரிப்பு பல்வேறு கட்டங்களில் உள்ளன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் ஜென்னர் இன்ஸ்டிடியூட் ஏஇசட்டி1222(AZD1222) தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்த நிறுவனம் பிரிட்டனின் கேம்பிரிட்ஜில் உள்ள அஸ்ட்ராஜெனெகா பிரிட்டிஷ்-ஸ்வீடிஷ் பன்னாட்டு மருந்து மற்றும் உயிர் மருந்துத் தயாரிப்பு நிறுவனம் உரிமத்தைப் பெற்றுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, வாஷிங்டனின் கைசர் பெர்மனென்ட் வாஷிங்டன் சுகாதார ஆராய்ச்சி நிறுவனம் எம்ஆர்என்ஏ-1273(MRNA-1273) தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

இந்த இரு நிறுவனங்களும் இந்தியாவின் இரு உற்பத்தியாளர்களுடன் தடுப்பு்பூசிகளைத் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்கெனவே செய்துள்ளன.

கரோனா வைரஸுக்கான தடுப்பு மருந்து உலகில் எங்கு வேண்டுமானாலும் தயாரிக்கப்படலாம், ஆனால், இந்திய உற்பத்தியாளர்கள் தலையீடு இல்லாமல் தேவையான அளவு தயாரிப்பதில் சாத்தியமில்லை
மேலும், இந்திய நிறுவனங்களும் இந்தியாவில் தடுப்பூசிகளை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு குழுக்களும் ஈடுபட்டுள்ளன.

புனேவில் உள்ள இந்திய மருத்து ஆராய்ச்சிக் கவுன்சில்(ஐசிஎம்ஆர்), நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி மற்றும் ஹைதராபாத்தின் சிஎஸ்ஐஆர் நிறுவனமான போன்ற ஆறு இந்திய நிறுவனங்கள் கோவிட்-19க்கான தடுப்பூசி ஒன்றை உருவாக்கி வருகின்றன.

இரண்டு இந்தியத் தடுப்பூசிகளான கோவாக்சின் மற்றும் ஜைகோவ்-டி ஆகியவற்றுடன் சேர்த்து உலகளவில் கண்டுபிடிக்கப்பட்ட 140 தடுப்பூசிகளில் 11 தடுப்பூசிகள் மனிதப் பரிசோதனைகளில் உட்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்ஸின், ஜைடஸ் காடில்லா நிறுவனத்தின் ஜைகோவ்-டி ஆகிய தடுப்பு மருந்துகள் கரோனா வைரஸை முடிவுக்கு கொண்டுவருவதற்கான தொடக்கப் பார்க்கப்படுகின்றன.

இந்த தடுப்பூசிகள் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதிக்க முதல் இரு கட்ட பரிசோதனைக்கு மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறை மூலம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், மூன்றாம்கட்ட பரிசோதனையும் நடத்தப்படுவது அவசியம்.

தடூப்பூசி முழுமையாக தயாராக 15 முதல் 18 மாதங்கள் ஆகலாம் என்பதால், இந்தியாவில் தடுப்பூசில் எதுவும் 2021-ம் ஆண்டுக்கு முன் மக்கள் பயன்பாட்டிற்கு வரத் தயாராக இருக்க வாய்ப்பில்லை.

இவ்வாறு அந்தக் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x