Last Updated : 01 Sep, 2015 08:20 AM

 

Published : 01 Sep 2015 08:20 AM
Last Updated : 01 Sep 2015 08:20 AM

உள்துறை செயலராக ராஜீவ் மகரிஷி நியமனம்

உள்துறை செயலராக மூத்த ஐஏஎஸ் அதிகாரி ராஜீவ் மகரிஷி நேற்று நியமிக்கப்பட்டார்.

ஏற்கெனவே இப்பொறுப்பில் இருந்த எல்.சி.கோயல் திடீரென அப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். முன்னதாக கோயல் 2 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் நியமிக்கப்பட்டார். ஆனால் சுமார் ஒன்றரை ஆண்டுகளிலேயே விடுவிக்கப்பட்டுள்ளார். மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கைக்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கோயல் தனது தனிப்பட்ட விஷயங்கள் காரணமாக பொறுப்பில் இருந்து விடுவிக்குமாறு கேட்டுக் கொண்டார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1978-ம் ஆண்டு ராஜஸ்தானில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக தேர்வான மகரிஷிக்கு இப்போது 60 வயதாகிறது. இவர் அடுத்த 2 ஆண்டுகளுக்கு இப்பொறுப்பில் இருப்பார். இப்போது மத்திய நிதியமைச்சகத்தில் பொருளாதார விவகாரங்களுக் கான செயலராக அவர் பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x