Last Updated : 29 Sep, 2015 09:42 AM

 

Published : 29 Sep 2015 09:42 AM
Last Updated : 29 Sep 2015 09:42 AM

நேதாஜி பற்றிய கூடுதல் ஆவணங்கள் வெளியீடு: மேற்கு வங்க அரசு நடவடிக்கை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் அவர் சார்ந்த ரகசிய ஆவணங்களின் மற்றொரு தொகுதியை மேற்கு வங்க அரசு நேற்று வெளியிட்டுள்ளது.

ஏற்கெனவே நேதாஜி தொடர்பான 64 ஆவணங்களை வெளியிட்டுள்ள நிலையில், தற்போது 1938-1947 காலகட்டத்துக்கு இடைப்பட்ட பாதுகாக்கப்பட்ட ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன, “பாதுகாக்கப்பட்ட இந்த ஆவணங்கள் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்பு ரகசியமானவையாக இருந்திருக்கலாம். ஆனால், தற்போது அவற்றை பொதுவெளிக்குக் கொண்டு வரும் தேவை ஏற்பட்டிருக்கிறது. எனவேதான் இவற்றைப் பகிரங்கப்படுத்தியுள்ளோம். இந்த ஆவணங்கள் மாநில ஆவணக்காப்பகம், மாநில தகவல் மையம், மத்திய நூலகம் போன்றவற்றில் பொதுமக்கள், ஆய்வாளர்கள், வரலாற்றாய்வாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டோரின் பார்வைக்கு வைக்கப்படும்” என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம், வங்கப்பஞ்சம், வங்கப் பிரிவினை உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் மொத்தம் 401 ஆவணங்களை சிடியாகவும் முதல்வர் மம்தா வெளியிட்டார்.

மேற்கு வங்கத்தில் ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி 2013-ம் ஆண்டு தொடங்கியது. 1947-ம் ஆண்டுக்கு பிந்தைய 10 ஆண்டு பாதுகாக்கப்பட்ட ஆவணங்களை டிஜிட்டல் மயமாக்கும் பணி தற்போது நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x