Last Updated : 22 Jun, 2020 12:16 PM

 

Published : 22 Jun 2020 12:16 PM
Last Updated : 22 Jun 2020 12:16 PM

இந்தியாவில் கரோனா பாதிப்பு 4.25 லட்சத்தைக் கடந்தது; ஒரே நாளில் 445 பேர் உயிரிழப்பு: தமிழகத்தை பின்னுக்கு தள்ளி டெல்லி முன்னேறியது

இந்தியாவில் இதுவரை இல்லாத வகையில் ஒரே நாளில் 14 ஆயிரத்து 821 பேருக்கு கரோனா பாஸிட்டிவ் கண்டறியப்பட்டுள்ளது, 445 பேர் உயிரிழந்தனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

இதன் மூலம் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4 லட்சத்து 25 ஆயிரத்து 282 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 13 ஆயிரத்து 699 ஆக அதிகரி்த்துள்ளது.

கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2 லட்சத்து 37 ஆயிரத்து 195 ஆகவும், சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 74 ஆயிரத்து 387 ஆகவும் அதிகரி்த்துள்ளது. தொடர்ந்து 11-வது நாளாக நாள்தோறும் 10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 55.77 சதவீதமாக உயர்ந்துள்ளது

கடந்த 24 மணிநேரத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் அதிகபட்சமாக மகாரஷ்டிராவில் 186 பேரும், டெல்லியில் 65 பேரும், தமிழகத்தில் 53 பேரும் உத்தரப்பிரதேசத்தில் 43 பேரும் உயிரிழந்துள்ளனர். குஜராத்தில் 25 பேரும், மேற்கு வங்கத்தி்ல் 15 பேரும், மத்தியப்பிரதேசத்தில் 14 பேரும், ராஜஸ்தானில் 12 பேரும், ஹரியாணாவில் 11 பேரும், தெலங்கானாவில் 7 பேரும் பலியாகியுள்ளனர்

ஆந்திரா, கர்நாடகாவில் தலா 5 பேரும், ஒடிசாவில் 2 பேரும், பிஹார், ஜம்மு காஷ்மீர், புதுச்சேரி, பஞ்சாபில் தலா ஒருவரும் உயிரிழந்தனர்

இன்று காலை 9 மணி நிலவரப்படி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

''மகாராஷ்டிர மாநிலத்தில் பலியானோர் எண்ணிக்கை 6,170 ஆக அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தில் உள்ள டெல்லியில் உயிரிழப்பு 2,175 ஆகவும், குஜராத்தில் உயிரிழப்பு 1,663 ஆகவும், தமிழகத்தில் பலி எண்ணிக்கை 757 ஆகவும் அதிகரித்துள்ளது.

மேற்கு வங்கத்தில் பலி எண்ணிக்கை 555 ஆகவும், மத்தியப் பிரதேசத்தில் உயிரிழப்பு 515 ஆகவும், உத்தரப் பிரதேசத்தில் பலி எண்ணிக்கை 550 ஆகவும், ராஜஸ்தானில் உயிரிழப்பு 349 ஆகவும் அதிகரித்துள்ளது.

தெலங்கானாவில் பலி எண்ணிக்கை 210 ஆகவும், ஹரியாணாவில் 160 ஆகவும், ஆந்திராவில் 106 ஆகவும் இருக்கிறது. கர்நாடகாவில் 137 பேரும், பஞ்சாப்பில் 99 பேரும் பலியாகியுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 82 பேரும், பிஹாரில் 53 பேரும், ஒடிசாவில் 14 பேரும், கேரளாவில் 21 பேரும், உத்தரகாண்டில் 27 பேரும் , இமாச்சலப் பிரதேசத்தில் 8 பேரும், ஜார்க்கண்டில் 11 பேரும், அசாமில் 9 பேரும் உயிரிழந்துள்ளனர். மேகாலயாவில் ஒருவர் உயிரிழந்துள்ளார். புதுச்சேரியில் 8 பேர் உயிரிழந்தனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 075 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 65,744 ஆக உயர்ந்துள்ளது.

அதைத் தொடர்ந்து 2-வது இடத்தில் இதுநாள் வரை தமிழகம்தான் இருந்து வந்தது.ஆனால் அதை டெல்லி இன்று முறியடித்துள்ளது. டெல்லியில் கரோனாவால்பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 59,746 பேராக அதிகரித்துள்ளது. 31,294 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்து 377 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 32,754 ஆகவும் அதிகரித்துள்ளது.

4-வது இடத்தில் உள்ள குஜராத்தில் 27,260 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19,349 பேர் குணமடைந்தனர்.
ராஜஸ்தானில் 14,930 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 11,903 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 17,731 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் 13,945 பேரும், ஆந்திராவில் 8,999 பேரும், பஞ்சாப்பில் 4,074 பேரும், தெலங்கானாவில் 7,802 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் 5,956 பேர், கர்நாடகாவில் 9,150 பேர், ஹரியாணாவில் 10,635 பேர், பிஹாரில் 7,612 பேர், கேரளாவில் 3,172 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,661 பேர் குணமடைந்துள்ளனர்

ஒடிசாவில் 5,160 பேர், சண்டிகரில் 406 பேர், ஜார்க்கண்டில் 2,073 பேர், திரிபுராவில் 1,221 பேர், அசாமில் 5,388 பேர், உத்தரகாண்டில் 2,344 பேர், சத்தீஸ்கரில் 2,275 பேர், இமாச்சலப் பிரதேசத்தில் 673 பேர், லடாக்கில் 837 பேர், நாகாலாந்தில் 211 பேர், மேகாலயாவில் 44 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாதர் நகர் ஹாவேலியில் 88 பேர், புதுச்சேரியில் 366 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரியில் 140 பேர் குணமடைந்தனர். மிசோரத்தில் 141 பேர், சிக்கிமில் 78 பேர், மணிப்பூரில் 841 பேர், கோவாவில் 754 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அருணாச்சலப் பிரதேசத்தில் 135 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்தமான் நிகோபர் தீவுகளில் 48 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்''.
இவ்வாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x