Published : 14 Jun 2020 06:59 AM
Last Updated : 14 Jun 2020 06:59 AM

கரோனா வைரஸால் இந்தியாவில் ஆண்களைவிட பெண்களுக்கு ஆபத்து அதிகம்

கரோனா வைரஸுக்கு உலகில் பெண்களை விட ஆண்களுக்கே இறப்பு ஆபத்து அதிகம் உள்ள நிலையில், அதற்கு நேர்மாறாக இந்தியாவில் ஆண்களை விட பெண்களுக்கே இறப்பு ஆபத்து அதிகம் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

டெல்லியில் உள்ள பொருளாதார வளர்ச்சி நிறுவனத்தை சேர்ந்த அபிஷேக் குமார் உள்ளிட்ட விஞ்ஞானிகள், இந்தியாவில் கரோனா வைரஸுக்கு உயிரிழந்தோர் புள்ளி விவரத்தை வயது மற்றும் பாலின அடிப்படையில் ஆய்வு செய்தனர்.

இதன் முடிவுகள், ‘ஜர்னல் ஆப் குளோபல் ஹெல்த் சயின்ஸ்’ இதழில் வெளியாகியுள்ளது. நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் உயிரிழந்த ஆண்கள் மற்றும் பெண்கள் எண்ணிக்கையை இவர்கள் ஆய்வு செய்ததில் ஆண்களின் இறப்பு விகிதம் 2.9 சதவீதமாகும் பெண்களின் இறப்பு விகிதம் 3.3 சதவீதமாகவும் உள்ளது.

இது தொடர்பாக ஆய்வாளர்கள் கூறும்போது, “2020 மே 20-ம் தேதி நிலவரப்படி நோய்த் தொற்று ஏற்பட்டவர்களில் பெண்களை (34%) விட ஆண்களே (66%) அதிகமாக இருந்தனர். ஆனால் 5 வயதுக்கு உட்பட்டவர்கள் முதல் முதியோர் வரை கிட்டத்தட்ட சம அளவில் நோய்த் தொற்றுக்கு ஆளாகியிருந்தனர். பிறகு இதில்மாற்றம் ஏற்பட்டுள்ளது.

வயதான ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் இறப்புஆபத்து அதிகம் உள்ளது. எனவேஅவர்களுக்கு சிறப்பு கவனம் அவசியமாகிறது” என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x