Published : 30 May 2020 15:51 pm

Updated : 30 May 2020 15:51 pm

 

Published : 30 May 2020 03:51 PM
Last Updated : 30 May 2020 03:51 PM

பைலட்டுக்கு கரோனா பாசிட்டிவ்: மாஸ்கோ பறந்த  ஏர் இந்தியா விமானம் பாதியிலேயே டெல்லி திரும்பியது 

air-india-s-delhi-moscow-flight-returns-midway-as-ground-team-realises-pilot-is-covid-19-positive

மாஸ்கோவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க டெல்லியிலிருந்து பயணிகள் இல்லாமல் பணியாளர்களுடன் மட்டுமே புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் மீண்டும் டெல்லியில் தரையிறங்கியது, காரணம் விமானிக்கு கரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது.

இது தொடர்பாக ஏர் இந்தியா அதிகாரிகள் கூறும்போது, “ஏ320 விமானம் வந்தே பாரத் மிஷனின் கீழ் இந்தியர்களை மீட்டுக் கொண்டு வர பயணிகள் இல்லாமல் மாஸ்கோ புறப்பட்டது. இது உஸ்பெகிஸ்தான் வான்வெளியை எட்டியவுடன் பைலட்களில் ஒருவருக்கு கரோனா இருப்பது தரையில் இருந்த அதிகாரிகளுக்கு உறுதி செய்யப்பட்டது.

விமானத்தை உடனே டெல்லிக்கு வரவழைத்தோம் மஹ்டியம் 12.30 மணிக்கு விமானம் டெல்லி திரும்பியது” என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். மாஸ்கோவுக்கு வேறொரு விமானம் செல்லவிருக்கிறது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Air India's Delhi-Moscow flight returns midway as ground team realises pilot is COVID-19 positiveபைலட்டுக்கு கரோனா பாசிட்டிவ்: மாஸ்கோ பறந்த  ஏர் இந்தியா விமானம் பாதியிலேயே டெல்லி திரும்பியதுONE MINUTE NEWSIndiaPilot CoronaCORONA INDIA

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author