Last Updated : 06 Aug, 2015 08:44 AM

 

Published : 06 Aug 2015 08:44 AM
Last Updated : 06 Aug 2015 08:44 AM

‘வாட்ஸ் ஆப்’ மூலம் புகார்: பெங்களூர் காவல் துறை அறிமுகம்

ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றை தொடர்ந்து, ‘வாட்ஸ் ஆப்’ மூலம் புகார் அளிக்கும் வசதியை பெங்களூரு காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.

குற்றச்செயல்களால் பாதிக்கப் படுபவர்களில் பலர் காவல் துறை யில் புகார் அளிக்க தயங்குகின்றனர். இதையடுத்து, இ-மெயில், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றின் மூலம் புகார் அளிக்கும் வசதியை நாட்டிலேயே முதல்முறையாக பெங்களூரு மாநகர காவல் துறை அறிமுகம் செய்தது. இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்ததால், பிற மாநில காவல் துறையினரும் இந்த வசதியை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் தற்போது ‘வாட்ஸ் ஆப்’ மூலமாக புகார் அளிக்கும் வசதியை பெங்களூரு காவல் துறை அறிமுகம் செய்துள்ளது.

இதுகுறித்து பெங்களூரு ஊர்க்காவல் படை டி.ஜி.பி. எம்.என்.ரெட்டி கூறும்போது,'' உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள், மாணவர்கள், தொழிலதிபர்கள் பெங்களூரு வந்து செல்கின்றனர். நகரில் நடைபெறும் குற்றச்செயல்களில் பாதிக்கப்படுவோர், காவல் நிலை யத்துக்கு வரத் தயங்குகின்றனர். எனவே நவீன தலைமுறையின் வசதிக்காக ‘வாட்ஸ் ஆப்’ மூலம் புகார் தெரிவிக்கும் வசதி அறிமுகப்பட்டுள்ளது. பாதிக்கப் பட்டவர்களோ, சம்பவ‌த்தை நேரில் பார்த்தவர்களோ 9480801000 என்ற எண்ணில் புகார் தெரிவிக்க லாம்''என்றார்.

இந்த திட்டத்துக்கு பெங்களூரு வாசிகளிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x