Last Updated : 15 May, 2020 05:58 PM

 

Published : 15 May 2020 05:58 PM
Last Updated : 15 May 2020 05:58 PM

விவசாயிகளின் நலனுக்காக ரூ.1 லட்சம் கோடியில் 11 அம்சத் திட்டம்: நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி சிறப்பு பொருளாதாரத் திட்டத்தின் மூன்றாவது தவணையாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ரூ.1 லட்சம் கோடியில் விவசாயிகளின் நலன், மீன்வளம் மற்றும் உணவு பதப்படுத்துதலுக்கான 11 அம்சத் திட்டத்தை இன்று அறிவித்தார்.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்த பிரதமர் மோடி ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதாரத் திட்டங்களை அறிவித்தார்.

இன்று அறிவிக்கப்பட்டுள்ள மூன்றாவது நடவடிக்கையானது விவசாயம், பால்பொருள் மற்றும் மீன்வளம் உள்ளிட்ட அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்து கவனம் செலுத்துகிறது என்று நிதியமைச்சர் தெரிவித்தார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது உரையில் கூறியுள்ளதாவது:

"இந்தியா மிகப்பெரிய பால் உற்பத்தி, மிகப்பெரிய சணல் மற்றும் பருப்பு வகைகள் உற்பத்தி, கரும்பு, பருத்தி, நிலக்கடலை, பழங்கள், காய்கறிகள் மற்றும் மீன்வளங்களில் இரண்டாவது பெரியது மற்றும் தானியங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளது.

இந்திய விவசாயிகள் உண்மையிலேயே சகிப்புத்தன்மையுள்ளவர்கள். மேலும் அவர்கள் எங்களுக்கு அதிக மகசூல் தருவார்கள் என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தியா 2019-20 (ஜூலை-ஜூன்) இல் 295.67 மில்லியன் டன் உணவு தானியங்களை அறுவடை செய்யத் தயாராக உள்ளது.

பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, இந்தியா சில உலகளாவிய வரையறைகளை எட்டிய இந்திய விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் புதிய 11 அம்சத் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

விவசாய உற்பத்தியில் உள்கட்டமைப்பு நிறுவனங்களை ஊக்குவிக்கும்வகையில் ரூ.1 லட்சம் கோடி விவசாய உள்கட்டமைப்பு நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் விவசாயத் துறையில் தொழில்முனைவோர் மற்றும் தொடக்க நிறுவனங்கள் மற்றும் விவசாயிகளின் கூட்டுறவு நிறுவனங்களுக்கும் நன்மை கிடைக்கும்.

ஊட்டச்சத்து பொருட்கள் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 2 லட்சம் மைக்ரோ நிதி நிறுவனங்கள் பயனடையும் வகையில் ரூ.10,000 கோடியை அரசு ஒதுக்கியுள்ளது.

இதில் கடல் உற்பத்திக்காக ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் இதில் உள்நாட்டு மீன்வளம் மற்றும் மீன்வளர்ப்பு போன்ற செயல்களுக்காக ரூ.11,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ 9,000 கோடி மீன்பிடி துறைமுகங்கள், கிடங்குகள், மீன்களுக்கான குளிர்ப்பதன நிலையங்கள் மற்றும் சந்தைகள் போன்ற உள்கட்டமைப்புகளை உருவாக்குவதற்காக இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது''.

இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x