Published : 12 May 2020 08:02 PM
Last Updated : 12 May 2020 08:02 PM

15 ரயில் சேவைகள் தொடங்கியது: டெல்லியில் இருந்து பிற நகரங்களுக்கு ரயில்கள் இயக்கம்

புதுடெல்லி

கரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன. தற்போது, வெளிமாநிலங்களில் பணியாற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள், சொந்த மாநிலங்களுக்குச் செல்வதற்கான ரயில்கள் மட்டும் இயக்கப்படுகின்றன. 3-ம் கட்ட ஊரடங்கு 17-ம் தேதி வரை அமலில் உள்ள நிலையில், இன்று முதல், 15 குறிப்பிட்ட ரயில்கள் டெல்லியிலிருந்து இயக்கப்பட்டன.

டெல்லியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கு இயக்கப்படும் ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று தொடங்கியது. புதுடெல்லியிலிருந்து இயக்கப்படும் 15 ரயில்கள், திப்ரூகார்க், அகர்தலா, ஹவுரா, பாட்னா, பிலாஸ்பூர், ராஞ்சி, புவனேஷ்வர், செகந்திராபாத், பெங்களூரு, சென்னை, திருவனந்தபுரம், மட்கான், மும்பை, அகமதாபாத், ஜம்மு தாவி ஆகிய நகரங்களுக்குச் செல்கின்றன.
அனைத்துப் பெட்டிகளும் குளிர்சாதன வசதி கொண்டு, குறைந்த அளவு நிறுத்தங்களில் மட்டுமே நின்று செல்லும். ராஜ்தானி ரயில் கட்டணத்துக்கு இணையாக இருக்கும். ஏசி 3 அடுக்குப் படுக்கையில் 52 பயணிகளும், 2-ம் வகுப்பில் 48 பயணிகளும் மட்டுமே சமூக விலகலைக் கடைப்பிடித்துப் பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

பயணிகள் அனைவரும் ரயில் நிலையத்துக்கு ரயில் புறப்படும் முன் 90 நிமிடங்களுக்கு முன்பாகவே வர வேண்டும், அனைத்துப் பயணிகளும் கண்டிப்பாக முக்கவசம் அணிய வேண்டும், பயணத்துக்கு முன்பாக பரிசோதனைக்கு உட்பட வேண்டும் என விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன. மேலும், பயணிகள் சொந்தமாக படுக்கை விரிப்புகள், கம்பளி ஆகியவற்றையும் கொண்டுவர வேண்டும்.

டெல்லியில் இருந்து மீண்டும் இயக்கப்படும், முதலாவது சிறப்பு ரயிலாக பிலாஸ்பூர் செல்லும் ரயில் எண் 02442 புது தில்லி ரயில் நிலையத்திலிருந்து இன்று காலை புறப்பட்டுச் சென்றது. இந்த ரயில் இயக்கப்பட்டதையடுத்து இந்திய ரயில்வே படிப்படியாக பயணிகள் ரயில் சேவையை தொடங்கியது. மொத்தம் மூன்று சிறப்பு ரயில்கள் இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றன.

பிற நகரங்களிலிருந்து புதுதில்லிக்கு மொத்தம் ஐந்து சிறப்பு ரயில்கள் புறப்பட்டுள்ளன.

டெல்லியில் இருந்து இயக்கப்படும் ரயில்

1 02692 புதுடெல்லி பெங்களூரு

2 02424 புதுடெல்லி திப்ரூகர்

3 02442 புதுடெல்லி பிலாஸ்பூர்

புதுடெல்லி - பிலாஸ்பூர் சிறப்பு ரயிலில் செல்லும் 1177 பயணிகளுக்காக மொத்தம் 741 பிஎன்ஆர் (பயணிகள் பெயர் பதிவு விவரங்கள்) பதிவேற்றங்கள் செய்யப்பட்டன. புதுடெல்லி - திப்ரூகர் சிறப்பு ரயிலில் செல்லும் 1122 பயணிகளுக்காக மொத்தம் 442 பிஎன்ஆர் பதிவேற்றங்கள் செய்யப்பட்டன. புதுடெல்லி - பெங்களூரு சிறப்பு ரயில் மூலமாக பயணம் செய்யும் 1162 பயணிகளுக்காக 804 PNR பிஎன்ஆர் பதிவேற்றங்கள் செய்யப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x