Published : 11 May 2020 06:48 AM
Last Updated : 11 May 2020 06:48 AM

முழு ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு தொழிற்சாலைகளை இயக்க வழிகாட்டு நெறிமுறைகள்- தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியீடு

விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் ஆலையில் விஷ வாயுக் கசிவு சம்பவம் நிகழ்ந்ததைத் தொடர்ந்து, இனி வரும் காலங்களில் ஊரடங்கு தளர்வுக்குப் பிறகு ஆலைகளைத் தொடங்குவதற்கு முன்பு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விரிவான வழிகாட்டுதலை தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்டிஎம்ஏ) வெளியிட்டுள்ளது.

தொழிற்சாலைகளை ஊரடங்கு காலத்துக்குப் பிறகு தொடங்கு வதற்கு முன்பு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் தொடர்பாக விரிவான வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள் ளது. இது அனைத்து மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங் களுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

சில உற்பத்தி ஆலைகளின் குழாய் பாதைகள், வால்வுகளில் ரசாயனம் தேங்கி இருக்கலாம். இது பணியை தொடங்கும் போது பேரிடர் நிகழ வாய்ப்பாக மாறும். இதேபோல கிடங்குகளில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அபாயகரமான ரசாயன பொருட்கள் மற்றும் வாயுக்கள் உள்ளிட்டவற்றாலும் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளது.

ஆலைகளை தொடங்கும் போது முதல் ஒரு வாரம் சோதனை ரீதியிலான இயக்கமாக இருக்க வேண்டும். இந்த காலத்தில் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொள்ள வேண் டும். இந்த ஒரு வார காலத்திலேயே ஆலையின் உச்சபட்ச உற்பத்தி இலக்கை எட்ட நினைக்கக் கூடாது. ஆலையைச் சுற்றிலும் 24 மணி நேரமும் மருந்து தெளிப்பு நடவடிக்கை எடுக்கப்பட வேண் டும்.

அதேபோல ஆலைகளில் பொது பகுதிகளில் 2 அல்லது 3 மணி நேரத்துக்கு ஒரு முறை கிருமி நாசினி தெளிக்கப்பட வேண்டும். குறிப்பாக உணவு அறை, பொதுவாக பயன்படுத்தப்படும் மேசை உள்ளிட்டவை ஒவ்வொரு முறை உபயோகப்படுத்தப்பட்ட பிறகும் சுத்தப்படுத்த வேண்டும்.

ஊழியர்கள் தங்கியுள்ள பகுதி களில் தொடர்ந்து கிருமி நாசினி தெளிப்பதன் மூலம் நோய் பரவ லைக் கட்டுப்படுத்த முடியும். அதே போல குறிப்பிட்ட ஒரு கரு வியை ஒரு தொழிலாளி பயன்படுத்தினால், அதை அடுத்த ஊழி யர் பயன்படுத்தும் முன்பு அதை கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்த வேண்டும். அதேபோல பயன்படுத் தும் உபகரணங்களில் வித்தியாச மான ஒலி அல்லது நெடி வந் தாலோ, வயர்கள் பழுதடைந்து இருந்தோலா, வித்தியாசமான அதிர்வுகள் தோன்றினாலோ உடனடியாக அந்தப் பிரிவின் இயக் கத்தை நிறுத்திவிட்டு சோதிக்க வேண்டும்.

தேவைப்பட்டால் முழு ஆலை யின் செயல்பாட்டையும் நிறுத்தி தீவிர சோதனை மேற்கொண்ட பிறகே ஆலையை செயல்படுத்த லாம். இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் ஆலை செயல்பாடுகளில் ஏற்படும் விபத்துகளை பெருமளவு குறைக்க முடியும்.

மின் உற்பத்தி மற்றும் வெப்பம் அளிக்கும் இயந்திரங்கள் உள் ளிட்டவற்றை சரியாக பராமரிக்க வேண்டும். அதற்குரிய மின் விநியோகம், இயந்திர பாகங்கள் மற்றும் ரசாயன கலப்பு பகுதிகளில் உள்ள பாகங்கள் நல்ல நிலையில் உள்ளதை உறுதி செய்த பிறகே இயக்க வேண்டும். இத்தகைய பகுதிகள் எப்போதுமே தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டிய பகுதிகளாகும். நீண்ட நாள் ஊரடங்குக்குப் பிறகு இவற்றை உடனடியாக இயக்கினால் பேராபத்து நிகழ வாய்ப்புண்டு.

ரசாயனங்கள், வாயு வெளி யிடும் ரசாயன கலவைகள், திறந்த நிலை வயர்கள், கன்வேயர் பெல்ட் மற்றும் தானியங்கி இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை இயக்குவதற்கு முன்பு தீவிர சோதனை மேற்கொள்வது அவ சியம். பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றாதது, ரசாயன கலவை களின் உரிய தேதி உள்ளிட்ட விவரங்கள் தெரியாமல் அவற்றை கையாள்வதும் ஆபத்தானது. இதுபோன்ற பகுதிகளில் விபத்து நிகழ்ந்தால் அதை கையாள்வது மிகவும் சவாலானதாக இருக்கும்.

மிகவும் ஆபத்தான ரசாயன பொருட்களைக் கையாளும் ஆலைகள் அவற்றை செயல்படுத் தும் முன்னர் முன்கூட்டியே பேரிடர் நிர்வாகம் குறித்து திட்டமிட வேண் டும். அனைத்து உற்பத்தி ஆலை களும் செயல்படுத்துவதற்கு முன்பு முழுமையான பாதுகாப்பு தணிக்கை செய்யப்பட வேண்டும்.

அனைத்து குழாய் பாதைகளி லும் கசிவு சோதனை மேற்கொள் ளப்பட வேண்டும். அபாயகரமான விபத்து பொருட்களைக் கையா ளும் ஆலைகள் 24 மணி நேரமும் அவசர கால தொழில்நுட்ப குழு வினரின் வசதியைப் பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆலைக்கு தேவையான அனைத்து உதவி களும் 200 கி.மீ. தூரத்துக்குள் இருக்கும் வகையில் இருக்க வேண் டும். ஊழியர்களின் உடல்நிலை 2 முறை சோதிக்கப்பட வேண்டும்.

கரோனா வைரஸ் அறிகுறி உள்ள பணியாளர்களை அனுமதிக் கக் கூடாது. அனைத்து ஊழியர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். ஒரு ஷிப்டுக்கு 33 சதவீத பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு என்டிஎம்ஏ வெளி யிட்ட வழிகாட்டி நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x