Published : 10 May 2020 07:21 PM
Last Updated : 10 May 2020 07:21 PM

வெளிநாட்டிலிருந்து கேரளா வந்திறங்கியவுடன் 3 பேருக்கு கரோனா உறுதி: பாதிப்பு 5 ஆக அதிகரிப்பு

அபுதாபி மற்றும் துபாயிலிருந்து ஏர் இந்தியா விமானத்தின் மூலம் இந்தியா திரும்பிய 368 பேர்களில் கேரளா வந்த 3 பேருக்கு கரோனா பாசிட்டிவ் உறுதியானது. ஏற்கெனவே சனிக்கிழமை இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் அயல்நாட்டிலிருந்து திரும்பிய 5 பேர்களுக்கு கரோனா பாசிட்டிவ் ஆனது.

கேரளாவில் கரோனா பாதிப்பு அதிகம் இருந்தது, ஆனால் கடுமையான சமூக விலகல் உள்ளிட்ட நடவடிக்கைகளினால் பெரிய அளவில் குறைத்தது, மொத்தம் 505 கரோனா கேஸ்கள் 4 மரணம் என்று அங்கு உள்ளது. இப்போது இந்த கூடுதல் கரோனா தொற்றினால் தற்போது சிகிச்சையில் 20 கரோனா நோயாளிகள் உள்ளனர்.

டெஸ்ட் செய்யாமல் அயல்நாட்டில் உள்ளவர்களை இந்தியாவுக்கு வரவழைப்பது அபாயகரமானது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அன்றே பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் எச்சரித்தார்.

அதாவது ஒரு விமானத்தில் 200 பேர் அழைத்து வரப்படுகின்றனர். இதில் ஒருவருக்கோ இருவருக்கோ வைரஸ் இருந்தால் இது மிகவும் அபாயகரமானது என்று பினராயி விஜயன் ஆபத்தை அன்றே கடிதம் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கேரளாவுக்குத் திரும்பிய அயல்நாட்டு இந்தியர்கள் மூவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x