Published : 07 May 2020 08:35 PM
Last Updated : 07 May 2020 08:35 PM

கரோனா தடுப்பு; ஆயுஷ் அமைச்சகத்தின் சஞ்சீவனி செயலி அறிமுகம் 

ஆயுஷின் சஞ்சீவனி செயலி மற்றும் கோவிட்-19 நோய்க்கான பல்முனை ஆய்வுகளையும் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் அறிமுகம் செய்து வைத்தார்.

கோவிட்-19 நிலைகள் தொடர்பான ஆயுஷை அடிப்படையாகக் கொண்ட மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையின் சஞ்சீவனி செயலி இன்று அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் இருந்தபடி, கோவாவிலிருந்து காணொலி மூலமாக பங்கேற்ற, ஆயுஷ் இணை அமைச்சர் ஸ்ரீபத் நாயக் முன்னிலையில் தொடங்கி வைத்தார்.

அப்போது, கோவிட்-19 நோயை எதிர்ப்பதற்கு, தொழில் நுட்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய மத்திய சுகாதார அமைச்சர், ஆயுஷ் அறிவுரைகளையும், நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளுதல், பயன்படுத்துதல் மற்றும் பின்பற்றுபவர்கள் பற்றிய விவரங்களை அறியவும், கோவிட்-19 பாதிப்பைத் தடுப்பதில் இவை எந்த அளவிற்கு செயல்படுகின்றன என்பதை அறியவும் சஞ்சீவனி என்ற அலைபேசி செயலி உதவும் என்றும் கூறினார்.

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் MEITYயால் உருவாக்கப்பட்டுள்ள இந்தச் செயலி 50 இலட்சம் மக்களைச் சென்றடையும் இலக்கு உள்ளது என்றார்

கோவிட்-19 நோய் மேலாண்மை, மத்திய சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மத்திய அறிவியல், தொழிலக ஆராய்ச்சி மையம் (CSIR), இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் (ICMR) போன்ற தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (UGC) ஆகியவை ஒருங்கிணைந்து செயல்படுவதற்கான ஆற்றல்மிகு தளத்தை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது என்றும், ஆயுஷ் சிகிச்சைமுறை மற்றும் தீர்வுகளை மட்டுமல்லாமல், உலக சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் வகையில் ஆயுஷ் அறிவை வளர்ப்பதற்கு ஏதுவான விதத்தில் இத்தளம் உள்ளது என்றும் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

மிகப்பழமையான பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவ அறிவின் மூலம் பெறக்கூடிய முழுமையான ஒட்டுமொத்த சுகாதார உடல்நல நன்மைகளை, இந்த அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து பரப்புவதற்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமம் மற்றும் இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு தலைமை அமைப்பு வழிகாட்டுவதாகவும், ஆதரவளிப்பதாகவும் ஹர்ஷ்வர்தன் கூறினார்.

இந்தச் செயலி தவிர செய்தியைத் தவிர மேலும் இரண்டு அறிவியல் ஆய்வுகளையும் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x