Last Updated : 04 May, 2020 08:56 PM

 

Published : 04 May 2020 08:56 PM
Last Updated : 04 May 2020 08:56 PM

அடங்காத கரோனா:  24 மணி நேரத்தில் 83 பேர் பலி, பாதிப்பு 2,573 பேருக்கு அதிகரிப்பு- மொத்த பலி 1,389 ஆக அதிகரிப்பு

கரோனா வைரஸுக்கு நாட்டில் பலி எண்ணிக்கை 1,389 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 42,836 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 83 மரணங்கள் நிகழ்ந்துள்ளன, பாதிப்பு எண்ணிக்கை 2,573 ஆக அதிகரித்துள்ளது.

செயலில் உள்ள கோவிட்-19 கேஸ்கள் 29,685 ஆக உள்ளது, 11,761 பேர் குணமடைந்துள்ளார்கள்.

சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி கூறும்போது, “நோயிலிருந்து 27.45% குணமடைந்துள்ளனர்” என்றார். மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 111 பேர் அயல்நாட்டின்ர்.

ஞாயிறு மாலை முதல் திங்கள் மாலை 5 மணி வரை கரோனாவுக்கு 83 பேர் பலியாகியுள்ளனர். இதில் குஜராத்தில் 28 பேரும், மகாராஷ்ட்ராவில் 27 பேரும், ம.பி.யில் 8, ராஜஸ்தானில் 6, ஆந்திராவில் 3, மேற்கு வங்கம் 2, உ.பி.2, ஹரியாணா, பஞ்சாப், தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, உத்தராகண்ட் மாநிலங்களில் தலா ஒரு நபர் என்று கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்,

மகாராஷ்ட்ராவில் மொத்தம் 548 பலிகளாக அதிகரித்து அதிகபட்ச பலிகளில் முதலிடத்தில் உள்ளது, குஜராத்தில் 290 பேரும், ம.பி.யில் 165 பேரும், ராஜஸ்தானில் 71 பேரும், டெல்லியில் 64 பேரும், உ.பி.யில் 45 பேரும், ஆந்திராவில் 36 பேரும், மேற்கு வங்கத்தில் 35 பேரும் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

தமிழகத்தில் பலி எண்ணிக்கை 30 ஆகவும் தெலங்கானாவில் 29 ஆகவும், கர்நாடகாவில் 26 ஆகவும் அதிகரித்துள்ளது.

பஞ்சாபில் 21, ஜம்மு காஷ்மீரில் 8, ஹரியானாவில் 5 பேர், கேரளா, பிஹார் மாநிலங்களில் முறையே 4 பேர், ஜார்கண்டில் 3 பேர் பலியாகியுள்ளனர்.

மேகாலயா, இமாச்ச, ஒடிசா, அஸாம், உத்தராகண்ட் மாநிலங்களில் தலா ஒருவர் மரணமடைந்துள்ளனர்.

ஆனால் மாநிலங்களின் கணக்குகளின் படி நாட்டில் கரோனா பாதிப்பு 43,865, பலி எண்ணிக்கை 1413 ஆக உள்ளது.

மத்திய சுகாதார அமைச்சக எண்ணிக்கைக்கும், மாநிலங்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் நடைமுறை தாமதங்களினால் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது.

மகாராஷ்ட்ராவில் பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக 12,974 ஆகவும், குஜராத்தில் 5,428 ஆகவும், டெல்லியில் 4,549 ஆகவும், தமிழ்நாட்டில் 3,023 ஆகவும், ம.பி.யில் 2,942 ஆகவும் ராஜஸ்தானில் 2,886 ஆகவும் உ.பியில் 2,742 ஆகவும், ஆந்திராவில் 1,650 ஆகவும், தெலங்கானாவில் 1082 ஆகவும் உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x