Published : 03 May 2020 06:52 PM
Last Updated : 03 May 2020 06:52 PM

மனதை நெகிழச் செய்கின்றன: உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம்

கோவிட் - 19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஒப்பற்ற பங்காற்றுவதற்காகவும், செய்துவரும் தியாகத்திற்காகவும், கொரோனா போராளிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் மரியாதை தெரிவித்துள்ளார்.

கோவிட் 19 பெருந்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் ஒப்பற்ற பங்காற்றுவதற்காகவும், செய்துவரும் தியாகத்திற்காகவும், கொரோனா போராளிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா இன்று வணக்கம் தெரிவித்துள்ளார்.

அமித் ஷா வெளியிட்டுள்ள ஒரு ட்வீட் செய்தியில் “கொரோனா போராளிகளான கதாநாயகர்களுக்கு, இந்தியா தனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது. மோடி அரசாங்கமும், தேசம் முழுவதும் உங்களுடன் நிற்கிறது என்று நான் உறுதி கூறுகிறேன். சவால்களை வாய்ப்புகளாக மாற்றி, கொரோனாவிடமிருந்து தேசத்தை நாம் விடுவிக்க வேண்டும். சுகாதாரமான, செழிப்பான, வலுவான நாடாக இந்தியாவை உருவாக்கி, உலகிற்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். ஜெய்ஹிந்த்” என்று அவர் கூறியுள்ளார்.

இன்று, கரோனா போராளிகள் பல விதங்களில் இந்திய இராணுவப் படையினரால் கௌரவிக்கப்பட்டனர். இச்செய்கைக்குப் பாராட்டு தெரிவித்த உள்துறை அமைச்சர், “கொரோனாவிடமிருந்து நாட்டை விடுவிப்பதற்காக இரவும் பகலும் அயராது உழைக்கும் மருத்துவர்கள், காவல்துறையினர், துணை இராணுவப் படையினர் மற்றும் இதர போராளிகளுக்கு, இந்திய இராணுவப் படையினர் மரியாதை செலுத்திய காட்சிகள் மனதை நெகிழச் செய்கின்றன. கொரோனாவுக்கு எதிராக நடக்கும் போராட்டத்தில் இந்தப் போராளிகள் வெளிப்படுத்தும் துணிவு நிச்சயம் மரியாதைக்குரியது” என்று கூறினார்.

இந்திய இராணுவப் படையினர் தேசிய காவல் நினைவகத்தில், கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராகப் போராடும் துணிவு மிக்க வீரர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இது குறித்து தமது சுட்டுரையில் குறிப்பிட்டுள்ள திரு. ஷா, “கொரோனா வைரசுக்கு எதிராகப் போராடி வரும் இந்தியாவின் துணிச்சல் உண்மையிலேயே போற்றத்தக்கது. இந்த நோய்க்கு எதிராகப் போராடி வரும் துணிவுமிக்க இராணுவ வீரர்களுக்கு, முப்படைகளும் தேசிய காவல் நினைவகத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கடினமான இந்த சமயத்தில், துணிச்சல் மிக்க இந்த வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு, ஒட்டுமொத்த நாடும் இணைந்து நிற்கிறது” என்று அமைச்சர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x