Published : 28 Apr 2020 09:07 PM
Last Updated : 28 Apr 2020 09:07 PM

கரோனா; உயிரி - தொழில் நுட்பத்துறையினருடன் ஹர்ஷ வர்த்தன் ஆய்வு

உயிரி-தொழில்நுட்பத் துறையின் சார்பிலும், அதன் தன்னாட்சி பெற்ற 18 அமைப்புகள் சார்பிலும், பொதுத் துறை நிறுவனங்கள் சார்பிலும் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆராய்ச்சிப் பணிகள் குறித்து இயக்குநர்கள் மற்றும் துறைத் தலைவர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்த்தன் இன்று காணொலி மூலம் ஆய்வு நடத்தினார்.

நோய் எதிர்ப்பு அணுக்களைக் கண்டறியும் உபகரணத் தொகுப்புகளைக் கண்டறிதல், பி.சி.ஆர். அடிப்படையிலான நோய்க்குறி கண்டறியும் உபகரணத் தொகுப்புகள் உருவாக்குதல், கோவிட்-19க்கான தடுப்பூசிகள் உருவாக்குதல் ஆகியவற்றை `மேக் இன் இந்தியா' என்ற இந்தியாவிலேயே தயாரித்தல் திட்டத்தின் கீழ் செய்வதற்கான பணிகளை துரிதப்படுத்துமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

மிகவும் லேசான அறிகுறிகள் உள்ள அல்லது அறிகுறிகளுக்கு முந்தைய நிலையில் உள்ள நோயாளிகளை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி வைப்பதற்கான வழிகாட்டுதல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. வீடுகளிலேயே தனிமைப்படுத்தல் நிலையில் இருப்பதற்கான வசதி உள்ளவர்கள், அவ்வாறே இருப்பதற்கான வாய்ப்பைத் தேர்வு செய்யலாம். கோவிட்-19 நோய்த் தாக்குதல் இருப்பதாக சந்தேகத்துக்கு உரியவர்கள் அல்லது நோய்த் தாக்குதல் உறுதி செய்யப்பட்டவர்களைக் கையாள்வது தொடர்பாக 2020 ஏப்ரல் 7-ம் தேதி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களுடன் சேர்த்து இவற்றையும் கடைபிடிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களைப் பின்வரும் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.

https://www.mohfw.gov.in/pdf/GuidelinesforHomeIsolationofverymildpresymptomaticCOVID19cases.pdf

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x