Published : 20 Apr 2020 08:42 PM
Last Updated : 20 Apr 2020 08:42 PM

மகாராஷ்டிராவில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: பாதிப்பு எண்ணிக்கை 4483 ஆக உயர்வு

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 283 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4483 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவத் தொடங்கியதிலிருந்து மோசமாக பாதிக்கப்பட்டிருப்பது மகாராஷ்டிர மாநிலம்தான். அங்கு இதுவரை கரோனா வைரஸால் 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நாளொன்றுக்கு சராசரியாக 300 என்ற எண்ணிக்கையில் கரோனா நோயாளிகள் அதிகரித்து வருகின்றனர். குறிப்பாக மும்பை நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்ராவின் மொத்த கரோனா நோயாளிகளில் பாதிக்கும் அதிகமானோர் மும்பையில் உள்ளனர். மும்பையில் ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப்பகுதியான தாராவியும் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 283 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மகாராஷ்டிர சுகாதாரததுறை அமைச்சர் ராஜேஷ் தோபே கூறியதாவது:

இன்று ஒரே நாளில் 283 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மாநிலத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4483 ஆக உயர்ந்துள்ளது. புதிதாக கரோனா தொற்று பாதித்த 283 பேரில் 187 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x