Published : 20 Apr 2020 04:11 PM
Last Updated : 20 Apr 2020 04:11 PM

23 ஆயிரம்  வாகன ஓட்டுனர்களுக்கு ரூ.5000: டெல்லி அரசு வழங்கியது

டெல்லி மாநில அரசு வாகன ஓட்டுனர்கள் 23 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தியுள்ளது.

வேலையிழந்துள்ள தொழிலாளர்களுக்கு டெல்லி அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. டெல்லி அரசு ஏற்கெனவே கட்டிட தொழிலாளர்களின் குடும்பத்திற்கு தலா 5000 வழங்கியுள்ளது.
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆட்டோ, டாக்சி, இ-ரிக்க்ஷா உள்ளிட்ட வாகன ஓட்டுனர்களுக்கு தலா 5,000 நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் கேஜ்ரிவால் அறிவித்தார்.
டெல்லியில் யாரும் பசியால் உணவின்றி தவிப்பதற்கு எனது அரசு விடாது, எனவே, அடுத்த 7 முதல் 10 நாட்களுக்குள் இவர்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும் எனத் தெரிவித்தார். அதன்படி ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளிட்டோருக்கு டெல்லி அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.

இதுகுறித்து டெல்லி மாநில போக்குவரத்துறை அமைச்சர் கைலாஷ் கெலோட் கூறியதாவது:
ஊரடங்கு உத்தரவால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள ஆட்டோ, டாக்சி, இ-ரிக்க்ஷா உள்ளிட்ட வாகன ஓட்டுனர்கள் 1.6 லட்சம் பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இவர்களில் 23 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் 20 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு அவர்கள் வங்கி கணக்கில் செலுப்படும்’’ எனக் கூறினார்.

வாகன ஓட்டுனர்கள் 23 ஆயிரம் பேரின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு 5 ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x